முறுக்கேறிய உடம்பு... மாப்பிள்ளே நீங்க வேற லெவல்…ஆரியாவை புகழும் மாமியார் !

சென்னை : ஆர்யாவின் 30வது படமான சார்பேட்டா படத்திற்கு மிகவும் கடுமையான உடல் பயிற்சிகளை செய்து நடித்துள்ளார்.

வட சென்னையின் குத்து சண்டையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.

ஜான் கொக்கேன், சந்தோஷ், பசுபதி, கலையரசன், காளி வெங்கட் உள்ளிட்ட முக்கிய நடிகர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசை

சந்தோஷ் நாராயணன் இசை

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய பா ரஞ்சித் தற்போது ஆர்யாவை வைத்து சார்பேட்டா படத்தை இயக்கி வருகிறார். கே9 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வாவ் என வர்ணித்த ரசிகர்கள்

வாவ் என வர்ணித்த ரசிகர்கள்

இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஆர்யாவின் குத்துச்சண்டை பயிற்சி வீடியோவும் மிகவும் வைரலானது. மேலும், ஆர்யாவின் கட்டுக்கட்டாக இருந்த உடலமைப்பை பார்த்து ரசிகர்கள் வாவ் என வர்ணித்தனர்.

ரசிகர்கள் வரவேற்பு

ரசிகர்கள் வரவேற்பு

இப்படத்தின் கதாபாத்திரம் குறித்த தகவல் நேற்று வெளியானது, இதில், ஆர்யா கபிலனாகவும், ஜான் கொக்கேன் வேம்புலியாகவும், கலையரசன் வெற்றிச் செல்வனாகவும்,பசுபதி ரங்கன் வாத்தியாராகவும், துஷாரா விஜயன் மாரியம்மாவாகவும், காளி வெங்கட் கோனி சந்திரனாகவும் நடித்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.

பெருமைப்படுகிறேன்

பெருமைப்படுகிறேன்

கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியானதும், பலரும் பாராட்டி வந்த நிலையில், ஆர்யாவின் மாமியார் ஷஹீன் பானு தனது ட்விட்டர் பக்கத்தில், ஆர்யாவின் வொர்க் அவுட் படத்தை வெளியிட்டு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, புத்திசாலித்தனம் அதனுடைய உச்சம் இது. நீங்கள் எங்களை பெருமைப்பட வைத்துள்ளீர்கள், நீங்கள் அடுத்த கட்டத்துக்குச் சென்றுள்ளீர்கள் என புகழ்ந்து கூறியுள்ளார். இந்த ட்விட்டர் பதிவுக்கு ஆர்யாவும் நன்றி அம்மா என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X