Arya on Karthi: ”அந்த ஒரு படம்... கார்த்தி ரிஜக்ட் பண்ண கதையில் இனி நடிக்க மாட்டேன்..” ஆர்யா ஓபன்!

சென்னை: கார்த்தி நடிப்பில் ராஜூ முருகன் இயக்கியுள்ள ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இதில் கார்த்தியின் நெருங்கிய நண்பர்களான விஷால், ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 Arya on Karthi: Arya says he never accepted any film that was rejected by Karthi

அப்போது பேசிய ஆர்யா, கார்த்தி ரிஜக்ட் பண்ண கதையில் இனி நடிக்க மாட்டேன் எனவும், அதற்கான காரணத்தையும் மனம் திறந்துள்ளார்.

கார்த்தி ரிஜக்ட் பண்ண கதையில் நடிக்க மாட்டேன்

கோலிவுட்டின் மினிமம் கியாரண்டி ஹீரோவாக மாஸ் காட்டி வருகிறார் கார்த்தி. பருத்தி வீரனில் தொடங்கிய கார்த்தியின் பயணம், இப்போது அவரது 25வது படமான ஜப்பான் வரை வெற்றிகரமாக தொடர்கிறது. ராஜூ முருகன் இயக்கியுள்ள ஜப்பான், அடுத்த மாதம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகிறது. கடந்தாண்டு தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் வெளியாகி 100 கோடி வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்தாண்டு ஜப்பான் திரைப்படம் கார்த்தியின் கேரியரில் பட்டாசாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை நேரு ஸ்டேடியத்தில் ஜப்பான் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடந்த இந்நிகழ்ச்சியில், சூர்யா, விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, இயக்குநர்கள் வினோத், சிறுத்தை சிவா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஜப்பான் திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்திய ஆர்யா, கார்த்தியின் கதை தேர்வு பற்றிய அவரது அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். அதாவது ஒருமுறை கார்த்தி நடிக்க மறுத்த படத்தில் ஆர்யா கமிட்டானாராம். அந்தப் படம் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த ஆர்யாவுக்கு, ஏமாற்றமே கிடைத்துள்ளது. அந்தத் திரைப்படம் வெளியாகி தோல்வியடைந்துள்ளது.

 Arya on Karthi: Arya says he never accepted any film that was rejected by Karthi

அதன்பின்னர் தான் கார்த்தி ஏன் இந்த கதையில் நடிக்க மறுத்தார் என புரிந்துகொண்டாராம் ஆர்யா. அந்தப் படத்தின் பெயரை சொல்லாமல் சம்பவத்தை மட்டும் சொன்ன ஆர்யா, அதன் பின்னர் கார்த்தி ரிஜக்ட் செய்த கதையில் நடித்தது இல்லை என மனம் திறந்துள்ளார். கார்த்தியின் கதை தேர்வு சிறப்பாக இருக்கும் என ஆர்யா வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

 Arya on Karthi: Arya says he never accepted any film that was rejected by Karthi

ஆர்யாவின் இந்த ஸ்டேட்மெண்ட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், ஆர்யா நடித்த பல படங்கள் தோல்வியடைந்தவை தான், இதில் இவர் எந்தப் படத்தை சொல்கிறார் என விவாதம் நடத்தி வருகின்றனர். அதேநேரம் கதைகளை தேர்வு செய்வதில் கார்த்தி கெட்டிக்காரர் தான் எனவும் அவர்கள் சர்டிபிகேட் கொடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X