இந்த தடவையாவது ஒர்க் அவுட் ஆகணும்.. சாயிஷா அம்மாவிடம் காதலைச் சொன்ன ஆர்யா!

சாயிஷாவுடனான தனது திருமணம் காதல் திருமணம் தான் என நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.

Recommended Video

தேனிலவின்போது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகை சயீஷா.

சென்னை: சாயிஷாவிடம் தன் காதலை வெளிப்படுத்தியது எப்படி என்பது பற்றி முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் ஆர்யா.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் காப்பான். இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 30ம் தேதி ரிலீசாகிறது. காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினி, இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஆர்யா, சாயிஷாவிடம் தான் காதலை வெளிப்படுத்தியது எப்படி என பகிர்ந்துகொண்டார்.

எங்க வீட்டு மாப்பிள்ளை:

எங்க வீட்டு மாப்பிள்ளை:

நடிகர் ஆர்யா பெரும்பாலும் தன்னுடன் நடித்த அனைத்து நடிகைகளுடனுமே சேர்ந்து கிசுகிசுக்கப்பட்டார். எப்போது தான் அவர் திருமணம் செய்து கொள்வார் என தமிழ் திரையுலகமே எதிர்பார்த்தது. தனியார் தொலைக்காட்சி ஒன்று அவருக்காக பெண் தேடும் படலத்தைக்கூட நிகழ்ச்சியாக ஒளிபரப்பியது.

சாயிஷாவுடன் காதல்:

சாயிஷாவுடன் காதல்:

ஆனால், அதிலும் கடைசி வரை தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் யார் என்பதைத் தேர்வு செய்யவில்லை ஆர்யா. இதனால் இந்த மனுசனுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணமே ஆகாதுப்பா என பலரும் பேசிக் கொண்டனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் காதலர் தினத்தில் தங்களது காதலை உலகிற்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர் ஆர்யாவும், சாயிஷாவும். கடந்த மார்ச் மாதம் திருமணமும் செய்து கொண்டனர்.

குழப்பம்:

குழப்பம்:

கஜினிகாந்த் படத்தில் சேர்ந்து நடித்த இந்த ஜோடி, பின் காப்பான் படத்தில் ஒன்றாக பணி புரிந்தது. இந்தப் படங்களின் படப்பிடிப்பில் தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்க வேண்டும் எனக் கருதப்பட்டது. ஆனால், சாயிஷாவின் அம்மாவோ இது காதல் திருமணமல்ல, பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம் எனக் கூறி குழப்பினார்.

ஆர்யா பேச்சு:

ஆர்யா பேச்சு:

இதனால் ஆர்யா-சாயிஷா திருமணம் காதல் திருமணமா அல்லது பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. தற்போது காப்பான் பட இசை வெளியீட்டு விழா மூலம் இதற்கு விடை கிடைத்துள்ளது. அதாவது, ‘இந்த காதல் திருமணத்தில் முடிய வேண்டும் என்பதற்காக சாயிஷாவின் தாயிடம் தான் தனது விருப்பத்தை முதலில் கூறியதாக' ஆர்யா தெரிவித்துள்ளார்.

சாயிஷாவின் அம்மா:

சாயிஷாவின் அம்மா:

இதுகுறித்து அவ்விழாவில் அவர் பேசியதாவது, "சாயிஷாவிடம் என் காதலை நான் நேரடியாக சொல்லவில்லை. இதற்குமுன் நான் பலமுறை பெண்களிடமே நேரடியாக காதலை சொல்லி தவறாக போயிருக்கிறது. எனவே அவரது அம்மாவிடம் தான் நான் என் விருப்பத்தை முதலில் தெரிவித்தேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X