அரண்மனை 3ம் பாகத்தில் ஆம்பள பேய்.. காஞ்சனா லாரன்ஸுக்கு டஃப் கொடுக்க சுந்தர்.சியின் மாஸ்டர் பிளான்!
சென்னை: தமிழ் சினிமாவில் சமீப காலமாக வரும் பேய் படங்கள் காமெடி கலந்து உருவாக்கப்பட்டு வருகின்றன.
Recommended Video
ராகவா லாரன்ஸின் காஞ்சனா வரிசை பேய் படங்கள் மற்றும் அரண்மனை வரிசை ஆவிப் படங்கள் வசூலிலும் நல்ல வேட்டையாடி வருகின்றன.
அரண்மனை பட பாகங்களில் வழக்கமாக ஹீரோயின்கள் தான் பேயாக நடித்து மிரட்டுவார்கள். மூன்றாம் பாகத்தில் அந்த கான்செப்ட்டை மாற்றி உள்ளராம் இயக்குநர் சுந்தர். சி.

பேய் வசூல்
கதையே இல்லாமல் கூட பேய் படம் எடுத்தால் மினிமம் கியாரண்டியாக அந்த படம் போட்ட முதல் திரும்ப வந்துவிடும் அளவுக்கு ஓடுவது வழக்கம். ராகவா லாரன்சின் காஞ்சனா மற்றும் சுந்தர்.சியின் அரண்மனை, சந்தானத்தின் தில்லுக்கு துட்டு போன்ற படங்கள் காமெடியும் ஹாரரும் கலந்து உருவாக்கப்பட்டு வசூல் வேட்டை ஆடி வருகின்றன.

அரண்மனை சீரிஸ்
ஆவ்னி மூவிஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. முதல் பாகத்தில் ஆண்ட்ரியாவுக்கும், இரண்டாம் பாகத்தில் திரிஷாவுக்கும் ஹன்சிகாவின் ஆவி பிடித்து, தன்னை கொன்றவர்களை பழிவாங்கும் கதையாக அரண்மனை இருக்கும்.

அரண்மனை 3
முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாம் பாகத்தை இயக்குந்ர் சுந்தர். சி இயக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். எங்கேயும் எப்போதும், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படங்களுக்கு இசை அமைத்த சத்யா மியூசிக் போட உள்ளார்.

ஆம்பள பேய்
அரண்மனை 3ம் பாகத்தில் நடிகை ஹன்சிகா இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக, பழிவாங்கப் படும் கதையில் ஒரு முன்னணி ஹீரோ நடிக்க உள்ளதாகவும், அவரது கதாபாத்திரம் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பெண் பேய்களே ஆட்சி செய்து வந்த அரண்மனை பாகங்களில் முதல் முறையாக நடிகர் ஆர்யா ஆம்பள பேயாக மிரட்ட உள்ளார் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

காஞ்சனாவுக்கு போட்டி
100 கோடிக்கும் மேல் வசூலை வாரி குவிக்கும் ராகவா லாரன்சின் காஞ்சனா சீரிஸுக்கு பேய் பட ஜானரில் கடும் போட்டியாக இருப்பது இயக்குநர் சுந்தர்.சியின் அரண்மனை வரிசை படங்கள் தான். இந்நிலையில், அடுத்த பாகத்தை இன்னமும் மிரட்டலாக எடுத்து காஞ்சனா படத்திற்கு டஃப் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











