பொண்ணு தேடுற கேப்பில் த்ரிஷாவுக்கும் ப்ரொபோஸ் பண்ணிய ஆர்யா
சென்னை: ஆர்யா ட்விட்டரில் த்ரிஷாவுக்கும் மறைமுகமாக ப்ரொபோஸ் செய்துள்ளார்.
ரொம்ப காலமாக சிங்கிளாக சுற்றி பிரியாணி விருந்து கொடுத்து ஜமாய்த்துக் கொண்டிருந்த நடிகர் ஆர்யா திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.
அதற்காக அவர் ட்விட்டரில் வித்தியாசமாக விளம்பரம் கொடுத்துள்ளார்.

அறிவிப்பு
தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 73301-73301 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் ஆர்யா. அது பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

த்ரிஷா
ஆர்யாவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் பேசாமல் நடிகை த்ரிஷாவுக்கு வாழ்க்கை கொடுக்கலாமே ஆர்யா என்று ஐடியா கொடுத்தனர். அவர்கள் கொடுத்த ஐடியாவை ஆர்யா பார்த்துவிட்டார் போல.
ப்ரொபோஸ்
ஆர்யாவின் ட்வீட்டை பார்த்த த்ரிஷா அவரை கலாய்த்துள்ளார். இதை பார்த்த ஆர்யாவோ நீங்கள் என்னை எப்பொழுதுமே சீரியஸாக எடுப்பது இல்லை. இல்லை என்றால் இந்த நிலையில் இருந்திருக்க மாட்டேன் என்று மறைமுகமாக ப்ரொபோஸ் செய்துள்ளார்.

ரிஜெக்ட்
இப்படித் தான் சில நாட்களுக்கு முன்பு அமலா பாலுக்கும் ட்விட்டர் மூலம் ப்ரொபோஸ் செய்தார் ஆர்யா. அந்த அம்மணி ஆளை விடு சாமி என்பது போன்று நைசாக நழுவி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











