இது அது இல்லை…. இயக்குநர் ராஜேஸ்
காமெடி படங்களை கலந்து கட்டி இயக்கிய ராஜேஸ், அழகுராஜாவின் தோல்வியினால் அமுங்கிப் போனார். இப்போது ஒரு சிறிய தேக்கநிலைக்கு பிறகு மீண்டு(ம்) வந்துள்ளார்.
ராஜேசின் புதிய படத்தில் கதாநாயகனாக மீண்டும் அவருடன் இணைகிறார் ஆர்யா. அதுமட்டுமல்ல, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்' வெற்றிக்கு ராஜேசுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக படத்தையும் தனது சொந்த நிறுவனமான ‘தி ஷோ பீப்பிள்' மூலமாகவே தயாரிக்கவும் செய்கிறார் ஆர்யா.

தமன்னா ஜோடி
ஆர்யாவுடன் முதன்முறையாக இந்தப்படத்தின் மூலம் ஜோடி சேர்கிறார் தமன்னா.

நான் காத்திருந்தேன்
ராஜேஸ் படத்தில் நடிப்பதென்றாலே ஜாலியான அனுபவம் தானே.. அதனால் தான் தமன்னாவும் கூட, "ராஜேஸ் சார் படத்தில் எப்போது நடிப்போம் என்றிருக்கிறது. சீக்கிரமே படப்பிடிப்பு துவங்காதா, செட்டுக்கு போகமாட்டோமா என மனம் ஏங்குகிறது" என்று டிவிட்டியிருந்தார் தமன்னா.

ஆர்யா உடன்
வீரம் படத்திற்கு பிறகு தமன்னாவுக்கு தமிழில் எந்த புதுப்பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால் நொந்து போய்கிடந்த அவருக்கு ஆறுதலாக கிடைத்துள்ளது இந்த படம்தான்.

பா எ பா பார்ட் 2
முதலில் இப்படம் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இது இரண்டாம் பாகம் இல்லை என்று கூறியுள்ளார் இயக்குநர் ராஜேஷ்.

இது புதிய கதை
நான் தற்போது உருவாக்கிக் கொண்டிருக்கும் திரைக்கதை பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. இது முற்றிலும் புதிய ஒரு கதை. இதில் ஆர்யா, தமன்னா, சந்தானம் ஆகியோர் நடிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











