'2.ஓ' படத்தை வெளியிடும் நடிகர் ஆர்யா!
கொச்சின் : ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் மிக பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம் '2.O'. அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த மாதமே ரிலீஸாகியிருக்க வேண்டிய படம், கிராஃபிக்ஸ் வேலைகள் இன்னும் முடிவடையாததால் வரும் ஏப்ரல் 27-ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்தப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை ஆகஸ்ட் சினிமா நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளது.

சுமார் ரூ.16 கோடிக்கு '2.O' படம் கேரளாவில் விற்பனையாகி உள்ளதாம். இது 'பாகுபலி 2' படத்தை விட அதிகம் எனக் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர் தான் நடிகர் ஆர்யா. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், தயாரிப்பாளர் ஷாஜி நடேசன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர்.
'2.O' படம் கேரளாவில் அதிகப்படியாக மம்முட்டி, மோகன்லால் படங்கள் ரிலீஸாகும் அளவுக்கு கணிசமான தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் இன்னொரு பங்குததாரராக இருந்த நடிகர் பிருத்விராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்த நிறுவனத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











