ஹன்சிகாவின் ரவுடி பேபி ஃபர்ஸ்ட் லுக் செம மிரட்டலா இருக்கே.. ரிலீஸ் பண்ணது யாரு தெரியுமா?
சென்னை: ஹன்சிகாவின் 50வது படமான மஹா விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், ஹன்சிகாவின் அடுத்த படமான ரவுடி பேபி படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
அரண்மனை படத்தில் இருந்து எஸ்கேப் ஆகி மஹா, ரவுடி பேபி என ஹாரர் கான்செப்ட் படங்களிலேயே நடித்து வருகிறார் நடிகை ஹன்சிகா.
ஹாலிவுட்டில் வெளியான Child's Play பேய் படம் போல இந்த படம் இருக்குமா? என்கிற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

ஹாரர் ஹன்சிகா
லவ்வபிள் ஹன்சிகாவாக காதல் படங்களில் உருட்டி வைத்த வெண்ணெய் சிலையாக நடித்து வந்த ஹன்சிகாவுக்கு திடீரென படங்கள் சரியாக போகாத நிலையில், தனது உடல் எடையை உருக்கி ஓடாய் தேய்ந்தார். முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட முடியாத நிலையில், ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து வரும் ஹன்சிகா ஹாரர் படங்களை தொடர்ந்து தேர்வு செய்து வருகிறார்.

ரவுடி பேபி ஃபர்ஸ்ட் லுக்
இயக்குநர் ராஜ சரவணன் இயக்கத்தில் ஹன்சிகா, ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ரவுடி பேபி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. பேபி ஒன்று கையில் கத்தியுடன் ஹன்சிகாவை நெருங்கி வர அவர் கையில் ஆயுதத்துடன் அந்த பேபியை தாக்க ஆயத்தமாக உள்ளது போல இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டலாக உள்ளது.

ஆர்யா ரிலீஸ்
நடிகை ஹன்சிகாவுடன் மீகாமன் படத்தில் இணைந்து நடித்த நடிகர் ஆர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது இந்த ரவுடி பேபி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்துள்ளார். மேலும், ரவுடி பேபி படக்குழு வெற்றிபெற தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

சைல்ட்ஸ் பிளே
ஹாலிவுட்டில் வெளியான சைல்ட்ஸ் பிளே படத்தில் சக்கி எனும் பேபி பொம்மை இப்படித்தான் கொலை வெறி பிடித்த பேயாக மாறி பலரை கொல்லும். இந்த போஸ்டரை பார்த்தால் அந்த படம் போல மிரட்டலாக இருக்குமா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ஹன்சிகாவுக்கு நிச்சயம் ஒரு கம்பேக் படமாக ரவுடி பேபி அமைய வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

மஹா ரிலீஸ்
லவ் பிரேக்கப்புக்கு பிறகு மீண்டும் சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடிக்கிறார்கள் என்றதுமே மஹா படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய இந்த படம் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து தற்போது ஒரு வழியாக வரும் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications











