நண்பேன்டா.. விஷாலை காப்பாற்ற மும்முரமாக களமிறங்கிய முன்னணி ஹீரோ.. யாரு தெரியுமா?

சென்னை: நடிகர் விஷால் தன்னுடைய உடல்நலக்குறைவு குறித்து தனது நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்லாமல் தனிப்பட்ட முறையில் சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். இந்நிலையில், அவருக்கு ஏற்பட்ட இந்த நிலைமையை பார்த்து ஷாக்கான முன்னணி ஹீரோ விஷாலை ஓடோடி சென்று பார்த்து அவரை குணப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சண்டக்கோழியாகவும் திமிரு பிடித்த ஆம்பளையாகவும் தமிழ் சினிமாவில் புரட்சி தளபதியாக வலம் வந்த ஆறடி ஆக்‌ஷன் ஹீரோ சிக்ஸ்பேக் சத்யம் விஷாலுக்கா இப்படியொரு நிலைமை என்றும் விஜயகாந்த் கடைசி நேரத்தில் நோய் பாதிப்பால் அவதிப்பட்டதை போல மனுஷன் ஆளே மாறிவிட்டாரே என நினைத்து ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

vishal arya

கடந்த ஆண்டு ஹரியின் ரத்னம் படத்தில் நடிக்கும் போது கூட நல்லாத்தானே விஷால் இருந்தார். திடீரென அவருக்கு என்ன ஆனது என்பது தான் அனைவரது கேள்வியாக உள்ளது. விஷாலுக்கு வைரல் ஃபீவர் தான் என்றும் அவர் விரைவில் குணமாகிவிடுவார் என மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டாலும், அவரது நிலைமையை வீடியோவாக பார்த்த பலரும் அதை ஏற்க மறுத்து வருகின்றனர்.

விஷால் வீட்டுக்கு ஓடிய ஆர்யா: நடிகர் ஆர்யா விஷாலின் நல்ல நண்பராக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். இருவரும் இணைந்து பாலா இயக்கத்தில் அவன் இவன், எனிமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். வரும் பொங்கலுக்கு வரவுள்ள சுந்தர். சியின் மத கஜ ராஜா படத்திலும் விஷால், ஆர்யா, சந்தானம் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில், விஷாலுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு குறித்து அறிந்த ஆர்யா உடனடியாக அவரது வீட்டுக்குச் சென்று வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டாம். வெளியே வா என தன்னுடன் அழைத்துச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆர்யா ஹோட்டலில் விருந்து: நடிகர் விஷால் தனது வீட்டிலேயே கடந்த சில மாதங்களாக அடைந்து கிடந்தது தான் அவரது இந்த நிலைமைக்கு காரணம் என நினைத்த ஆர்யா அவரை ஜாலியாக மாற்றி வெளியே அழைத்து வந்து அவரது மனக்கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் சரி செய்தால் தான் அவர் குணமாக முடியும் என நினைத்து அவரை தனது நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு தேற்றி வருகிறார் என்றும் ஆர்யாவின் அண்ணா நகர் ஹோட்டலில் அவருக்கு விருந்து உணவும் வழங்கப்பட்டதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் வேலையே இதுதான்: நண்பன் விஷாலை காப்பாற்றுவது தான் இனிமேல் என்னுடைய முதல் வேலையே என்கிற அளவுக்கு ஆர்யா விஷால் உடல்நிலையை சரிசெய்ய அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கூறுகின்றனர். விஷாலின் நண்பர்களும் அவரது உடல்நலனில் அதிகம் அக்கறை காட்டத் துவங்கியிருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. கூடிய விரைவில் பழையபடி விஷால் பட்டையைக் கிளப்புவார் என்றும் அவரது இயக்கத்தில் உருவாகி வரும் துப்பறிவாளன் 2 படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X