ஆர்யா பட விழாவுக்கு ஜோடியாக வந்த சிம்பு -நயன்தாரா
சென்னை: நடிகர் ஆர்யாவின் பட விழாவுக்கு சிலம்பரசன்&நயன்தாரா இருவரும் ஜோடியாக வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
நடிகர் ஆர்யா அவருடைய தம்பி சத்யாவை கதாநாயகனாக நடிக்க வைத்து, 'அமர காவியம்' என்ற படத்தை சொந்தமாக தயாரித்து இருக்கிறார். இதில், மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜீவா சங்கர் டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்தின் 'பிரிமியர் ஷோ' (விசேஷ காட்சி), சென்னை ராயப்பேட்டையில் உள்ள 'எஸ்கேப்' தியேட்டரில் நடந்தது.
அதில் நடிகர்கள் விஷால், ஸ்ரீகாந்த், ஷாம், விஜயசேதுபதி, கிருஷ்ணா, உதயநிதி ஸ்டாலின், விஷ்ணு விஷால், நடிகைகள் லட்சுமிராய், ஜனனி அய்யர், லேகா வாஷிங்டன், சஞ்சிதா ஷெட்டி, டைரக்டர்கள் சுசீந்திரன், பாண்டியராஜன், அட்லீ, பட அதிபர் ஏ.எம்.ரத்னம், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

ஜோடியாக வந்த சிம்பு – நயன்
இந்த பட விழாவுக்கு சிம்புவும்,நயன்தாராவும் ஜோடியாக வந்தார்கள். போட்டோகிராபர்களுக்கு ஜோடியாக, 'போஸ்' கொடுத்தார்கள். இரண்டு பேரையும் பார்க்க ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பத்திரப்படுத்திய சிம்பு
நயன்தாராவை சிம்பு அரவணைத்தபடி, பத்திரமாக தியேட்டருக்குள் அழைத்து சென்றார். இருவரும் ஜோடியாக பட விழாவுக்கு வந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பிரிந்த காதல்
சிம்புவும் நயன்தாராவும் சில வருடங்களுக்கு முன்பு காதலர்களாக இருந்தார்கள். பின்னர் இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள்.

முறிந்த காதல்கள்
நயன்தாரா, பிரபுதேவாவுடன் காதலாகி திருமணம் வரை நெருங்கினார். அந்த காதலும் முறிந்தது. இதேபோல் சிலம்பரசன், ஹன்சிகா மீது காதலாகி, பாதியிலேயே அந்த காதலும் முறிந்து போனது.

ஜோடி சேர்ந்தனர்
காதலில் தோல்வி அடைந்த சிம்புவும் நயன்தாராவும் மீண்டும் 'இது நம்ம ஆளு' படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள்.

வெறும் நட்புதான்
''இரண்டு பேருக்கும் இடையே மறுபடியும் காதல் ஏற்படவில்லை. நண்பர்களாக பழகி வருகிறோம்'' என்று சிம்பு கூறி வருகிறார். நயன்தாரா இதுபற்றி கருத்து எதுவும் சொல்லவில்லை. இந்த நிலையில், இருவரும் ஜோடியாக படவிழாவுக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

அமரகாவியத்திற்கு
இதேபோல அமரகாவியம் பிரீமியர் ஷோவைப் பார்க்க உதயநிதி, கிருஷ்ணா, சத்யா, ஆர்யா,ஜீவா,ஷங்கர், கார்டூனிஸ்ட் மதன், ஜி.வி.பிரகாஷ், ஜிப்ரான், ஸ்ரீமன், ரூபா மஞ்சரி. வி.ஜெ.ரம்யா,ஸ்ரீகாந்த், வந்தனா ஸ்ரீ காந்த்,விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் வந்தனர்.

விஷால் – வரலட்சுமி
இதேபோல் அமரகாவியம் பிரிமியர் ஷோவிற்கு விஷால், வரலட்சுமி, ராய்லட்சுமி, லேகா வாஷிங்டன், சோனியா அகர்வால், நந்தினி ஆகியோரும் வந்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











