அடுத்த வீட்டில் வாழப் போகும் பொண்ணுக்கு இப்படி முத்தம் கொடுப்பது சரியா ஆர்யா?

By Siva

Recommended Video

டிஆர்பிக்காக இந்த பெண்ணை ஆடவிட்டு வேடிக்கை பார்க்கும் ஆர்யா...!!- வீடியோ

சென்னை: எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யா போட்டியாளர்களுக்கு முத்தம் கொடுப்பது, தோளில் கையை போடுவது எல்லாம் நல்லாவா இருக்கு?

வயது ஏறிக் கொண்டே போகும் ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பெண் தேடுகிறார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 16 பேரில் ஒருவரை திருமணம் செய்யப் போகிறாராம்.

ஆர்யாவுக்காக அந்த பெண்களும் பல போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள்.

டிஆர்பி

டிஆர்பி

டிவி நிகழ்ச்சிகளில் டிஆர்பியை ஏற்ற யாராவது ஒருவரை குறி வைப்பார்கள். எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அபர்னதி தான் சிக்கியுள்ளார்.

மரியாதை

மரியாதை

ஆர்யாவை மரியாதை இல்லாமல் போடா, வாடான்னு பேசுவது, ஏதோ அவர் தனக்கே சொந்தமானவர் போன்று சீன் போடுவதுமாக உள்ளார் அபர்னதி.

தோள்

தோள்

ஆர்யா அபர்னதியை கட்டிப்பிடித்து, தோள் மீது கையை போட்டு, முத்தம் கொடுத்தார். ஆர்யாவின் நண்பர்களான ஷாம், பரத் வேறு அபர்னதியை பிடித்திருப்பதாக ஏத்திவிடுகிறார்கள்.

கடுப்பு

கடுப்பு

சக போட்டியாளர்கள் ஆர்யாவிடம் கடலை போட்டால் அபர்னதி ஓவராக சீன் போடுகிறார். அடுத்த வீட்டுக்கு வாழப் போகும் பொண்ணுங்களுக்கு இந்த ஆர்யா இப்படி பறக்கும் முத்தம், கன்னத்தில் முத்தம், கட்டிப்பிடி வைத்தியம் செய்வது சரியல்ல என்ற விமர்சனம் கிளம்பியுள்ளது.

புஸ்

புஸ்

இந்தியில் இப்படி சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தி அதில் வெற்றி பெற்றவர்கள் திருமணம் செய்யவில்லை. இந்நிலையில் இந்த அபர்னதி என்ற பெண்ணை சீன் போட வைக்கிறார்கள். முதலில் அந்த பெண் வெற்றி பெற வேண்டும், பின்னர் ஆர்யா அவரை திருமணம் செய்ய வேண்டும். இது எல்லாம் நடக்கும் முன்பே அபர்னதியை ஆட விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.(எல்லாம் டிஆர்பி படுத்தும் பாடு)

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X