வைரலாகும் ஆர்யாவின் வெறித்தன எக்சர்சைஸ் வீடியோ...இதுக்கு சாயிஷா என்ன சொல்லிருக்கார் பாருங்க!
சென்னை: நடிகர் ஆர்யாவின் எக்சர்சைஸ் வீடியோ வேகமாக பரவிவருகிறது. இதற்கு சாயிஷா கமென்ட் அடித்துள்ளார்.
Recommended Video
நடிகர் ஆர்யா, உடல்நலத்தை பேணுவதில் அதிக ஆர்வம் காட்டி வருபவர். பல கிலோமீட்டர் சைக்கிளிங், இல்லை என்றால் ஜிம்மே கதி என்று இருப்பவர்.
அடிக்கடி தனது எக்சர்சைஸ் போட்டோக்களை ட்விட்டரில் போட்டு ரசிகர்களையும் அவர் ஊக்கப்படுத்துவது வழக்கம்.

நடிகை சாயிஷா
கடந்த சில நாட்களுக்கு முன் அவர் பதிவிட்டிருந்த போட்டோ, அனைவரையும் மிரள வைத்திருந்தது. நடிகர் ஆர்யாவும் நடிகை சாயிஷாவும் கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்தபோது காதல் கொண்டனர். பிறகு கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இணைந்து சூர்யாவின் காப்பான் படத்தில் நடித்திருந்தனர். இருந்தாலும் அதில் ஜோடியாக நடிக்கவில்லை.

கன்னடத்தில் சாயிஷா
இதையடுத்து டெடி படத்தில் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். சக்தி சவுந்தரராஜன் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர், ஆர்யாவின் பிறந்த நாளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சாயிஷா கன்னடத்தில் புனித் ராஜ்குமார் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
சல்பேட்டா பரம்பரை
ஆர்யா, பா.ரஞ்சித் இயக்கும் சல்பேட்டா பரம்பரை படத்தில் நடிக்கிறார். குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட இதன் கதை, வடசென்னையில் நடந்த உண்மைச் சம்பவம் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்துக்காக உடலை மாற்றி வருகிறார் ஆர்யா. கடந்த சில நாட்களுக்கு முன், உடலை முறுக்குக் கம்பி போல மாற்றி அவர் வெளியிட்டிருந்த போட்டோ வைரலானது.
எக்சர்சைஸ் வீடியோ
இந்நிலையில் இப்போது புதிய எக்சர்சைஸ் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், சில நேரங்களில் சிறந்த முடிவுகளுக்காக, கடினமாக உழைக்க வேண்டும் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் ஆர்யா கடுமையாக எக்சர்சைஸ் பண்ண, வயிற்றில் எதையோ கொண்டு கோச் அடிக்க, அந்த வீடியோவும் வேகமாக பரவி வருகிறது.

எனக்கு வலிக்கிறது
இதையடுத்து ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா, 'உங்களை பார்த்தால் எனக்கு வலிக்கிறது. கடின உழைப்பு அதிகம்தான்' என்று தெரிவித்துள்ளார். இவரைப் போல பலரும் அந்த வீடியோவுக்கு கமென்ட் போட்டுள்ளனர். இவ்வளவு கஷ்டம் தேவையில்லை என்று சிலரும், விக்ரமுக்கு பிறகு நீங்கதான் இவ்வளவு ரிஸ்க் எடுக்கறீங்க? என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











