ஆர்யா தயாரிப்பில் அரவிந்த் சாமி நடிக்கும் ரெண்டகம்... சூட்டிங் முடிந்தது!

சென்னை : மலையாளம் மற்றும் தமிழில் உருவாகி வந்த ரெண்டகம் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது.

படத்தில் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் மற்றும் அரவிந்த் சாமி முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

படத்தை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார். பெலினி டிபி இயக்கத்தில் உருவாகியுள்ளது படம்.

ரெண்டகம் படம்

ரெண்டகம் படம்

நடிகர் ஆர்யா தயாரிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள படம் ரெண்டகம். இந்தப் படத்தை ஃபெல்லினி டிபி இயக்கியுள்ளார். மலையாள நடிகர் குஞ்சக்கோ போபன் மற்றும் அரவிந்த் சாமி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

த்ரில்லர் படம்

த்ரில்லர் படம்

மலையாளத்தில் ஒட்டு என்ற பெயரில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் அரவிந்த் சாமி நடித்துள்ளார். படத்தில் ஈஷா ரெப்பா, தீப்தி சதி மற்றும் ஜாக்கி ஷெராப் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

சூட்டிங் நிறைவு

சூட்டிங் நிறைவு

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதாக ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது ட்விட்டர் பக்க்ததின் மூலம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் துவங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெல்லினி டிபி இயக்கம்

ஃபெல்லினி டிபி இயக்கம்

படத்தை இயக்கியுள்ள ஃபெல்லினி, டொவினோ தாமஸ் நடிப்பில் தீவண்டி என்ற வெற்றிப் படத்தை இயக்கி கவனம் பெற்றவர். இந்நிலையில் ரெண்டகம் படத்திற்கு காசிப் இசையமைத்துள்ளார். படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாக உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Recommended Video

ரசிகர்கள்னாலே பிரச்சனைதான் | Actor Prabhu Deva Speech | Thael Movie Audio Launch | Filmibeat tamil
சாக்லேட் ஹீரோ குஞ்சாக்கோ

சாக்லேட் ஹீரோ குஞ்சாக்கோ

மலையாளத்தில் சாக்லேட் ஹீரோவாக கொண்டாடப்படுபவர் குஞ்சாக்கோ போபன். இவர் இதுவரை தமிழில் நடித்ததில்லை. இந்நிலையில் இந்தப் படம் மூலம் இவர் தமிழுக்கு வருகிறார். மலையாள நடிகர்கள் பலரும் தமிழில் தொடர்ந்து நடித்துவரும் நிலையில் இவரது அறிமுகம் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

மலையாளத்தில் ரீ என்ட்ரி

மலையாளத்தில் ரீ என்ட்ரி

இதேபோல 25 ஆண்டுகளுக்கு பிறகு அரவிந்த் சாமியும் இந்தப் படம் மூலம் மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். ஆர்யா தனது ஆகஸ்ட் சினிமாஸ் மூலம் படத்தை தயாரித்துள்ள நிலையில், நேற்றைய தினம் அவருக்கு ட்விட்டர் தளத்தில் சக நடிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர் அதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X