சார்ப்பட்டா படத்தோட ட்ரெயிலர்.... நாளை வெளியாக இருக்கறதாக ஆர்யா அறிவிப்பு

சென்னை : நடிகர் ஆர்யா வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள படம் சார்ப்பட்டா. பா.ரஞ்சித் இயக்கியுள்ளார்.

நீண்ட நாட்களாக ரிலீசுக்காக இந்த படம் காத்திருந்த நிலையில் வரும் 22ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நாளைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குநர் பா ரஞ்சித் மற்றும் நாயகன் ஆர்யா ஆகியோர் அறிவித்துள்ளனர்.

ரஞ்சித் இயக்கம்

ரஞ்சித் இயக்கம்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் நடிப்பில் காலா படத்தை இயக்கிய இயக்குநர் பா ரஞ்சித் அடுத்ததாக ஆர்யாவை வைத்து சார்ப்பட்டா படத்தை இயக்கியுள்ளார். கடந்த ஜனவரியிலேயே இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரிலீசுக்காக படம் காத்திருந்தது. படத்தில் ஆர்யாவுடன் கலையரசன், பசுபதி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

கொரோனாவால் தள்ளிப்போன ரிலீஸ்

கொரோனாவால் தள்ளிப்போன ரிலீஸ்

கடந்த 70, 80களில் வடசென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளார் ரஞ்சித். கடந்த ஜனவரியிலேயே படப்பிடிப்பு முடிவடைந்ததால் ஏப்ரல், மே மாதங்களிலேயே இந்த படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது.

22ம் தேதி ரிலீஸ்

22ம் தேதி ரிலீஸ்

தியேட்டர்களில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக படக்குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்துள்ளது. வரும் 22ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் இந்த படம் ரிலீசாக உள்ளது.

ரஞ்சித், ஆர்யா அறிவிப்பு

ரஞ்சித், ஆர்யா அறிவிப்பு

இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் நாளை வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குநர் பா ரஞ்சித் மற்றும் நாயகன் ஆர்யா தங்களது ட்விட்டர் பக்கங்களில் அறிவித்துள்ளனர். ஆர்யாவின் டெடி படமும் ஓடிடியில் ரிலீசாகி சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சார்ப்பட்டா படமும் ஓடிடியில் ரிலீசாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X