“சார்பட்டா“ படத்தின் முதல் பாடல் நீயே ஒளி வெளியானது !
சென்னை : சார்பட்டா பரம்பரை படத்தின் முதல் பாடலான நீயே ஒளி என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகிறது.
Recommended Video
இந்தப் படத்தின் மேக்கிங் மற்றும் கேஸ்ட் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி அதன் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இத்திரைப்படம் அமேசான் பிரைமில் ஜூலை 22ந் தேதி வெளியாக உள்ளது.

இயக்குனர்
மெட்ராஸ், அட்டக்கத்தி, கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய பா ரஞ்சித்தின் அடுத்த படமான சர்பேட்டா பரம்பரை படம் சுதந்திரத்திற்கு பின் காலகட்டத்தில் நடக்கும் பாக்ஸிங் கதையாகும். இதில் ஆர்யா சஞ்சன நடராஜன் துஷாரா விஜயன் பசுபதி உட்பட பலர் நடித்துள்ளனர்.

பகை
இரண்டு பாக்ஸிங் பரம்பரைக்குள் நடக்கும் பகை பற்றி இக்கதை அமைந்திருக்கும் என டிரைலரை பார்க்கும்போது தெரிகிறது. இந்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கிறது.

ஜூலை 22 ஆம் தேதி
இப்படத்தின் அனைத்துப்பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்த நிலையில், கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டன. இருப்பினும், இப்படத்தை திரையரங்கில்தான் வெளியிடுவது என்று பிடிவாதமாக இருந்த ரஞ்சித் வேறுவழியின்றி இப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிட சம்மதம் தெரிவித்தார். இத்திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி அமேசானில் வெளியாக உள்ளது.

முதல் வீடியோ பாடல்
இந்தப் படத்தின் மேக்கிங் மற்றும் கேஸ்ட் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி அதன் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்திலிருந்து முதல் பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது. நீயே ஒளி என்ற பாடலில் ஆர்யா தீவிரமாக பாக்ஸில் பயிற்சி மேற்கொள்கிறார். இணையத்தில் வெளியாகி இந்த பாடல் மக்கள் மனதை கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











