ஆர்யா நடித்துள்ள 'சார்பட்டா பரம்பரை' ஓடிடியில் ரிலீஸ்... விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை : நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சார்பட்டா பரம்பரை. இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வடசென்னையின் பாக்சர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படம் ஓடிடியில் விரைவில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடலமைப்பை மாற்றிய ஆர்யா

உடலமைப்பை மாற்றிய ஆர்யா

நடிகர் ஆர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் சார்பட்டா பரம்பரை. வடசென்னையின் பாக்சர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்கியுள்ளார் பா.ரஞ்சித். இந்த படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய உடலமைப்பை கட்டுக்கோப்பாக மாற்றியுள்ளார் நடிகர் ஆர்யா.

ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு

ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு

அனைத்து பணிகளும் நிறைவுற்று தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது சார்பட்டா பரம்பரை. படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்காக படக்குழுவினர் காத்திருந்த நிலையில், திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பது இன்னும் சரியாக தெரியாத நிலையில் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த படத்தின் உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

கே9 ஸ்டூடியோஸ் தயாரிப்பு

கே9 ஸ்டூடியோஸ் தயாரிப்பு

சார்பட்டா பரம்பரையில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், துஷாரா உள்ளிட்டோர் ஆர்யாவுடன் இணைந்து நடித்துள்ளனர். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பறிவ் பணிபுரிந்துள்ளனர். கே9 ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X