அடேங்கப்பா.. நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு அடித்த அட்டகாச அதிர்ஷ்டம்.. இவ்ளோ கோடியாமே?
துபாய்: பிரபல நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு லாட்டரி சீட்டில் ரூ. 32 கோடி பரிசாக கிடைத்துள்ளது.
பிரபல நடிகர் ஆர்யா, இப்போது பா.ரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதையடுத்து விஷால் நடிக்கும் எனிமி படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

பிக் டிக்கெட் லாட்டரி
இதற்கிடையே நடிகை ஆர்யாவின் சகோதரிக்கு அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியில் ரூ. 32 கோடி பரிசாக கிடைத்துள்ளது. நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா, தமிழில் சில படங்களில் ஹீரோவாக நடித்தார். இவருடைய சகோதரி தஸ்லினா (Thaslina). தொழிலதிபர் அப்துல் கட்டாஃப் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

லாட்டரி சீட்டு
அப்துல், ஓட்டல் பிசினஸ் செய்து வருகிறார். இந்தியா மற்றும் அரபு நாடுகளில் இவருடைய ஓட்டல்கள் இருக்கின்றன. திருமணத்துக்குப் பிறகு கத்தாரில் செட்டிலாகிவிட்ட தஸ்லினாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இவர், அபுதாபி டூட்டி ஃபிரி பிக் டிக்கெட் லாட்டரி சீட்டை ஆன்லைனில் கடந்த மாதம் வாங்கி இருந்தார்.

நம்ப முடியவில்லை
இதன் முதல் பரிசு. 15 மில்லியன் திர்காம். அதாவது இதன் இந்திய மதிப்பு, ரூ.32 கோடி. இந்நிலையில், தஸ்லினாவுக்கு அந்த பரிசு கிடைத்திருக்கிறது. இதுபற்றி தஸ்லினா கூறும்போது, கடந்த மாதம் 26 ஆம் தேதி இந்த டிக்கெட்டை வாங்கினேன். என்னால் நம்பவே முடியவில்லை. என்னிடம் இந்த தகவலை சொன்னபோது திக்குமுக்காடி போனேன் என்று கூறியுள்ளார்.

இந்தியர்களுக்கு பரிசு
இந்த பரிசுத் தொகையால் அவர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த அபுதாபி லாட்டரி சீட்டில், இந்தியர்களுக்கே அதிக பரிசு தொகை கிடைத்திருக்கிறது. இரண்டாவது பரிசை, பிரேம் மோகன் என்பவரும் மூன்றாவது மற்றும் நான்காவது பரிசை, அலி அஸ்கர், நிதின் பிரகாஷ் என்ற இந்தியர்களும் பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications











