மருத்துவ மாஃபியா.. ஆர்யாவின் டெடி எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: நாணயம், டிக் டிக் டிக், மிருதன் உள்ளிட்ட வித்தியாசமான படங்களை இயக்கிய இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடிப்பில் வெளியாகி உள்ள படம் டெடி.

மகாசிவரார்த்திரியை முன்னிட்டு நேற்று நள்ளிரவு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியானது.

இரவு முழுக்க கண் விழித்த மக்கள் டெடி படத்தை பார்த்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள விமர்சனங்களை இங்கே காண்போம்.

டெடி கதை என்ன

டெடி கதை என்ன

உயிரோடு நடமாடும் கரடி பொம்மையை வைத்து ஆங்கிலத்தில் டெட் எனும் படம் வெளியாகி இருந்தது. அதைப் போலவே தமிழிலும் ஒரு படத்தை இயக்கி உள்ள இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன் மெடிக்கல் மாஃபியாவை தோலூரிக்கும் விதமாக இந்த படத்தின் கதையை உருவாக்கி உள்ளார் இயக்குநர்.

டெடி யார்?

டெடி யார்?

நடிகர் ஆர்யா ஒசிடி பாதிக்கப்பட்ட நபராக கச்சிதமாக நடித்துள்ளார். மேலும், எந்த கலையை பார்த்தாலும் உடனடியாக கற்றுக் கொள்ளும் திறனும் அவருக்கு இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த படத்தில் டெடி பொம்மையாக மாறுவது வேற யாருமே இல்லை அவரது மனைவியும் நடிகையுமான சாயிஷா தான். அவர் ஏன் டெடியாக மாறுகிறார்? மீண்டும் சாயிஷாவாக? மாறுகிறாரா இல்லையா? என்பது தான் கதை.

குழந்தைகளுக்கு பிடிக்கும்

குழந்தைகளுக்கு பிடிக்கும்

கரடி பொம்மை கூட நடப்பதுமாக, பேசுவதுமாக ஹீரோவுக்கு ஒரு ஹீரோயினாக இருப்பதுமாக இருப்பதை பார்த்தால் யாருக்குத் தான் பிடிக்காது. தத்ரூபமான சிஜி எஃபெக்டால் குழந்தைகளுக்கு டெடி படம் பார்த்த உடனே பிடித்து விடும் படமாக அமைந்துள்ளது. ஆனால், திரைக்கதையில் சில சறுக்கல்களும் இருப்பதை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.

மெடிக்கல் கிரைம் த்ரில்லர்

மெடிக்கல் கிரைம் த்ரில்லர்

மெடிக்கல் கிரைம் த்ரில்லர் படத்தில் அழகான டெடி பியரை வைத்து வித்தியாசமாக படத்தை கையாண்டுள்ளார் இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன். குழந்தைகளுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் விதமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. வில்லன் கதாபாத்திரத்தை வலுவாக வடிவமைத்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

கெமிஸ்ட்ரி சூப்பர்

கெமிஸ்ட்ரி சூப்பர்

நடிகர் ஆதவ் கண்ணதாசன் டெடி படத்தை பார்த்து விட்டு படம் அருமையாக உள்ளது. டெடிக்கும் ஆர்யாவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பர், நிச்சயம் குழந்தைகள் இந்த படத்தை விரும்பி பார்ப்பார்கள் என கமெண்ட் செய்துள்ளார். சாயிஷாவின் நடிப்பு பிரமாதம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தப்பு தான்

தப்பு தான்

அது சரி.. மிருதன், டிக் டிக் டிக் டைரக்டர் கிட்ட கொஞ்சம் எதிர்பார்த்தது தப்பு தான் என இந்த நெட்டிசன் நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார். ஆர்யாவின் டெடி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ஆனால், நிச்சயம் டெடி படம் குழந்தைகளுக்கு பிடிக்கும் என்பதே பலரது கருத்து.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X