ஹாலிவுட் ’டெட்’க்கும்.. ஆர்யா ‘டெடி’க்கும் என்ன வித்தியாசம்.. வைரலாகும் டெடி டீசர்!
சென்னை: சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில், ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகி உள்ள டெடி படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Recommended Video
மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கரடி பொம்மை டீசரில், அனிமேஷன் பொம்மை போல தெரியாமல், லைவ்வாக மிரட்டுகிறது.
ஹாலிவுட் படமான 'டெட்' படத்தின் ரீமேக்காக இருக்குமா? என்ற சந்தேகத்தை டீசரிலேயே இயக்குநர் தெளிவாக்கி உள்ளார்.
இமானின் இசையில் வெளியான டெடி படத்தின் பாடல்கள் ஹிட்டாகி உள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள டீசரில், பின்னணி இசையும் பக்காவாக படத்தை லிஃப்ட் பண்ணுகிறது.

ஹாலிவுட் ஆசை
ஹாலிவுட் ஸ்டைல் படங்களை தமிழில் உருவாக்க வேண்டும் என்ற ஆசை இயக்குநர் சக்தி செளந்தர் ராஜனுக்கு அதிகமாவே இருக்கிறது என்பதை டெடி படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் படங்களை தொடர்ந்து, அடுத்த ஹாலிவுட் ஸ்டைல் படமாக டெடி படத்தை உருவாக்கி உள்ளார்.
டீசர் ரிலீஸ்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்யாவின் டெடி டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ஆர்யா, சாயிஷா, மகிழ் திருமேனி, கருணாகரன் மற்றும் டெடி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன் பேக்டு படமாக டெடி உருவாகி உள்ளதை டீசரில் அழகாக விவரித்துள்ளார் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன்.

டெட் ரீமேக்கா?
டெடி தலைப்புடன் ஆர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த கோலிவுட் ரசிகர்கள், இந்த படம் 2012ம் ஆண்டு ஹாலிவுட்டில் செத் மேக் ஃபர்லேன் இயக்கத்தில் வெளியான டெட் படத்தின் காப்பியா? அல்லது ரீமேக்கா? என்ற சந்தேகம் கிளம்பியது. ஆனால், அந்த படம் அடல்ட் ஒன்லி படமாக உருவாகி இருந்த நிலையில், டெடி ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கிறது.

வில்லன்
ஆர்யாவின் மீகாமன், அருண் விஜய்யின் தடம் படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி டெடி படத்தில் ஸ்டைலான வில்லனாக நடித்துள்ளார். பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் சல்பேட்டா படத்திலும், மகிழ் திருமேனி தான் வில்லன். இந்நிலையில், டெடி டீசரிலும் மிரட்டியுள்ளார்.

குழந்தைகளுக்கு பிடிக்கும்
கடந்த ஆண்டு எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம், குழந்தைகளை கவர்ந்த நிலையில், ஆர்யாவின் டெடி படமும் நிச்சயம் குழந்தைகளை கவரும் என்பதில் சந்தேகமில்லை. ஹாலிவுட்டில் வெளியான டெட் படத்தை பார்க்காத பலருக்கும், இந்த தமிழ் டெடி நிச்சயம் புதிய அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











