டெடி படத்தின் ட்ரைலர் இன்று ரிலீஸ்.. படம் வெளியாகும் தேதியும் முடிவானது!
சென்னை: ஆர்யா, சாயிஷா ஆகியோரின் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் டெடி.
இந்த படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார், இமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதி செய்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

காத்திருப்பில் படங்கள்
ஆர்யா நடிப்பில் 'சார்பட்டா பரம்பரை' மற்றும் 'அரண்மனை 3' ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக பணியாற்றி வருகிறார் டெடி படத்தின் நாயகன் ஆர்யா.

படக்குழு குழப்பம்
டெடி படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த வருடமே தொடங்கிய நிலையில் படக்குழு கொரோனா தொற்று காரணமாக மேற்கொண்டு எந்த பணிகளையும் செய்ய முடியாமல் குழப்பம் நிலவியது. பின்னர் சமீபத்தில் இறுதிக்கட்ட பணிகள் மீண்டும் தொடங்கியது.

உறுதியான தேதி
படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதா, OTT யில் வெளியிடுவதா என்று தவித்து வந்த படக்குழு முடிவாக படத்தை பெரிய விலைக்கு ஹாட் ஸ்டார் OTT தளத்திற்கு விற்றுள்ளது. மார்ச் 12ம் தேதி படத்தை ஹாட்ஸ்டாரில் வெளியிடவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ரசிகர்கள் ஆர்வம்
ரிலீஸ் தேதி வெளியான நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கம் என்பதால் படத்தின் ட்ரைலர் மேல் ரசிகர்களுக்கு ஆர்வம் கூடியுள்ளது. இந்த படத்தின் டீசர் முன்னரே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











