ஜி.வி.பிரகாஷூக்கு நயன், சமந்தா கொடுத்த சர்ப்ரைஸ்...
சென்னை: பென்சில் படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். மணி நாகராஜ் இயக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் பள்ளி மாணவராக நடிக்கிறார். அவருக்கு ஜோடி ஸ்ரீதிவ்யா.
ஒரு வழியாக இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்ட நிலையில், ஆனந்த விகடனுக்கு தன் முதல்பட அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்று அளித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
அதில், தமிழ் சினிமாவில் உள்ள நண்பர்கள் அவருக்கு கொடுத்த டிப்ஸ் குறித்து அவர் கூறியிருப்பதாவது :-

குட் பாய்ஸ்...
டிப்ஸா.... செம கலாய் கலாய்ச்சுருவாங்க. என் லுக் பார்தத்து அவங்க ஜாலி கலாட்டா பண்ணக் கூடாதுனு நினைச்சேன். ஆனா, குட் பாய்ஸ்... பாராட்டித் தள்ளிட்டாங்க.

விஜயின் பாராட்டு...
ரொம்ப கியூட்டா இருக்கீங்ண்ணா. கலக்கிட்டீங்கனு முதல் ஆளா பாராட்டினார் விஜய்.

ஆர்யாவின் அக்கறை...
இனி வெளியே எங்கே போனாலும் உன் லுக்ல கவனமாக இருனு அக்கறையாப் பேசினார் ஆர்யா.

அசத்தல்...
ரஹ்மான் அங்கிள் அசத்தல்னு ட்வீட் பண்ணினார். ரொம்ப சந்தோஷமா இருந்தது.

டிப்ஸ்...
சிம்பு, விஷால், இயக்குநர்கள் வெற்றிமாறன், விஜய் எல்லாரும் ஏகப்பட்ட டிப்ஸ் கொடுத்தாங்க.

சமந்தா தந்த சர்ப்ரைஸ்...
திடீர்னு சமந்தாவும், நயன் தாராவும் போனில் கூப்பிட்டு வாழ்த்தினாங்க. சரியான பாதையில் தான் போயிட்டு இருக்கோம்னு தோணிச்சு' என் இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











