அய்யோ ஆர்யா, நடிகையை பார்த்து இப்படியா சொல்வது: கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
Recommended Video

ஒரு டிவிட் போட்டு நெட்டிசன்களிடம் வசமாக சிக்கி கொண்ட ஆர்யா... இது தேவையா ?- வீடியோ
சென்னை: ஆர்யா ஆர்வக்கோளாறில் போட்ட ட்வீட்டால் நெட்டிசன்களிடம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார்.
ஆர்யாவுக்கு வயதாகிக் கொண்டே போகிறது ஆனால் இன்னும் திருமணமாகவில்லை. வீட்டில் பெண் தேடியும் பலனில்லை. ஆர்யாவே பெண் கேட்டு ட்விட்டரில் வீடியோ எல்லாம் வெளியிட்டார்.

இந்நிலையில் அவர் சந்தோஷ் பி ஜெயக்குமாரின் கஜினிகாந்த் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக சயீஷா சைகல் நடிக்கிறார்.
சயீஷா வனமகன் படத்தில் ஆடிய ஆட்டத்தை பார்த்தே கோலிவுட் ஹீரோக்கள் எல்லாம் அசந்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யா, சயீஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அந்த ட்வீட்டில் அவர் சயீஷாவை க்யூட்டி, ஜூஸி என்று வர்ணித்துள்ளார். ஆர்யாவின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் க்யூட்டி சரி அது என்ன ஜூஸி என்று கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.
Comments


Click it and Unblock the Notifications