மீண்டும் இணையும் டெடி டீம்... கேப்டன் என்ற டைட்டிலை வெளியிட்ட படக்குழு

சென்னை : நடிகர் ஆர்யா -இயக்குநர் சக்தி சவுந்தரராஜன் கூட்டணியில் டெடி படம் வெளியாகி சிறப்பான வெற்றியை பெற்றது.

இந்த டீம் தற்போது மீண்டும் இணைந்துள்ளது. ஆர்யா தயாரிக்கும் இந்தப் படம் அவரது 33வது படமாக உருவாகவுள்ளது.

இந்தப் படத்திற்கு கேப்டன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்யா

நடிகர் ஆர்யா

கோலிவுட்டின் சிறப்பான மற்றும் அதிகமான அலட்டல் இல்லாத ஹீரோவாக உள்ளார் ஆர்யா. அவரது நடிப்பில் அடுத்தடுத்து சார்பட்டா பரம்பரை, அரண்மனை 3 மற்றும் எனிமி உள்ளிட்ட படங்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. மூன்று படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன.

 அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

இந்நிலையில் அடுத்தடுத்து படங்களில் தன்னை கமிட் செய்துக் கொண்டு நடித்து வருகிறார் ஆர்யா. ஆர்யா மற்றும் இயக்குநர் சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் வெளியாகி டெடி படம் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்ற நிலையில் தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

ஆர்யாவின் கேப்டன் படம்

ஆர்யாவின் கேப்டன் படம்

ஆர்யாவின் 33வது படமாக அமைந்துள்ள இந்தப் படத்தை திங்க் ஸ்டூடியோசுடன் இணைந்து ஆர்யா தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தின் பூஜை தற்போது போடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டைட்டிலையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்திற்கு கேப்டன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

டெடி இயக்குநர் மகிழ்ச்சி

டெடி இயக்குநர் மகிழ்ச்சி

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சக்தி சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். மேலும் சகோதரர் ஆர்யாவுடன் தொடர்ந்து 2வது படத்தில் இணைந்துள்ளது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இயக்குநர்கள் உருவாக்கும் கதாபாத்திரங்களில் தன்னை புகுத்திக் கொள்ளும் திறன் ஆர்யாவிற்கு உள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

வித்தியாசமான கேரக்டர்

வித்தியாசமான கேரக்டர்

கேப்டன் படத்தில் இதுவரை ஆர்யா ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். சக்தி சவுந்தரராஜன் முன்னதாக டிக் டிக் டிக், மிருதன், டெடி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 3 படங்களும் வித்தியாசமான கதைக்களத்தில் ரசிகர்களை கவர்ந்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இமான் இசை

இமான் இசை

இதனிடையே, கேப்டன் படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரீஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். படத்தின் இசையமைப்பாளராக இணைந்துள்ளார் இமான். மேலும் மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதவுள்ளார்.

ஆர்யா மகிழ்ச்சி

ஆர்யா மகிழ்ச்சி

கேப்டன் படத்தின் டைட்டில் தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்த டைட்டில் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஆர்யா, தனக்கு பிடித்த நபருடன் மீண்டும் இணைந்துள்ளதாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X