ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை அமேசான் பிரைமில் எப்போ ரிலீஸ் தெரியுமா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை அமேசான் பிரைமில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னையை சேர்ந்த குத்துச்சண்டை வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி உள்ள இந்த படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டு வருகின்றனர்.

முரட்டுத்தனமாக

முரட்டுத்தனமாக

மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கிய பா. ரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் குத்துச் சண்டை வீரராக நடிகர் ஆர்யா நடித்துள்ளார். அதற்காக முரட்டுத்தனமான தோற்றத்திற்கு ஆர்யா மாறிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கின.

சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரை

வடசென்னை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக விளங்கிய குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படம் ஒரு வரலாற்று படமாக உருவாகி இருக்கிறது. நடிகர் ஆர்யா, பசுபதி, கலையரசன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அமேசான் பிரைமில்

அமேசான் பிரைமில்

நடிகர் ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நல்ல தொகைக்கு அமேசான் பிரைம் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. டெடி படத்தைத் தொடர்ந்து ஆர்யாவின் அடுத்த படமும் ஒடிடியில் வெளியாகிறது.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

வரும் ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது அமேசான் பிரைம் வெளியிட்டுள்ளது. நடிகர் ஆர்யா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் அதனை ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X