20 நாட்களில் திருமணம்: இப்படி செய்யலாமா ஆர்யா, சயீஷா?
Recommended Video

சென்னை: ஆர்யா, சயீஷா வெளிநாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.
கஜினிகாந்த் படத்தில் முதன்முதலாக ஆர்யாவும், சயீஷாவும் ஜோடியாக நடித்தார்கள். அவர்களை திரையில் பார்த்தவர்கள் ஜோடி நன்றாக உள்ளதே என்று விமர்சித்தனர். ரீல் ஜோடி நிஜ வாழ்க்கையிலும் விரைவில் ஜோடியாக உள்ளது.
இந்நிலையில் அவர்களின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

சயீஷா
ஆர்யாவும், சயீஷாவும் வெளிநாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. புகைப்படங்களில் இருவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள். 20 நாட்களில் திருமணத்தை வைத்துக் கொண்டு இப்படி ஊர் சுற்றலாமா என்று சிலர் அக்கறையோடு கேள்வி எழுப்பியுள்ளனர்.

திருமணம்
இத்தனை நாட்களாக மொரட்டு சிங்கிளாக இருந்த ஆர்யா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதை பார்த்து அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். காதல் கைகூடியது போன்றே அவர் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் என்கிறார்கள்.

மகிழ்ச்சி
ஆர்யா தங்கள் வீட்டு மாப்பிள்ளையாக வருவதில் சயீஷாவின் அம்மா ஷஹீன் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். ஆர்யா, சயீஷா திருமணம் அடுத்த மாதம் 10ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கும் என்றும், அதன் பிறகு சென்னையில் திருமண வரவேற்பு நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

காப்பான்
ஆர்யாவும், சயீஷாவும் காப்பான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு சயீஷா தொடர்ந்து படங்களில் நடிப்பாரா இல்லை வீட்டை மட்டும் கவனித்துக் கொள்வாரா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











