ஆர்யா-சயீஷா சங்கீத் நிகழ்ச்சி: கவாஸ்கர் வந்தாக, சஞ்சய் தத் வந்தாக, இன்னும்...
ஹைதராபாத்:
ஆர்யா, சயீஷாவின் சங்கீத் நிகழ்ச்சியின்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ஆர்யா, நடிகை சயீஷாவின் திருமணம் இன்று நடைபெற்றது. முன்னதாக நேற்று சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று பலர் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியின்போது சயீஷா நடனம் ஆடியுள்ளார்.

சயீஷா
சங்கீத் நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் சயீஷா மிகவும் அழகாக உள்ளார். ஆர்யா மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.

அழகு
ஆர்யா, சயீஷா ஜோடி மிகவும் அழகான ஜோடி என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களின் சங்கீத் நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் கலந்து கொண்டார்.

செம
சயீஷா எப்படி நடனம் ஆடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். சங்கீத் நிகழ்ச்சியில் அவர் நடனம் ஆடியதை பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் அசந்துவிட்டனர்.

பாலிவுட்
ஆர்யா, சயீஷா சங்கீத் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கலந்து கொண்டார்.

அஞ்சு
ஆர்யா, சயீஷா வீட்டு விசேஷத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கலந்து கொண்டார். அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை அஞ்சு.


Click it and Unblock the Notifications











