அடுத்த ஆடும் சிக்கிடுச்சு.. ஆர்யா - சாயிஷாவுக்கு டும் டும் டும்.. திருமணத் தேதி வெளியானது!

நடிகர் ஆர்யா - சாயிஷா திருமணத் தேதி வெளியாகியுள்ளது.

Recommended Video

ஆர்யா-சயீஷா திருமணம் | ஆர்யா ஹேப்பி அண்ணாச்சி- வீடியோ

சென்னை: நடிகர் ஆர்யா - சாயிஷா ஜோடிக்கு வரும் மார்ச் மாதம் 10ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தன்னுடன் நடித்த பல நடிகைகளுடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்டவர் நடிகர் ஆர்யா. இவரது திருமணம் எப்போது என்பதை தமிழகமே ஆர்வமாக எதிர்பார்க்கிறது என்பது, தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற 'எங்க வீட்டு மாப்பிள்ளை'க்கு கிடைத்த வரவேற்பு மூலம் உறுதியானது.

சமீபத்தில் ஆர்யாவின் நெருங்கிய நண்பரான விஷால் தனது திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்ததால், அடுத்ததாக அவரது திருமணம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்தது

ஆர்யா காதல்:

ஆர்யா காதல்:

இந்நிலையில், தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் சேர்ந்து நடித்த நடிகை சாயிஷாவை ஆர்யா காதலிப்பதாக சமீபகாலமாக ஊடகங்களில் ஒரு பேச்சு உள்ளது. விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியானது. இதனை சம்பந்தப்பட்ட இருவருமே மறுக்காததால், இது ஏறக்குறைய உண்மை என்றானது.

திருமண தேதி:

திருமண தேதி:

அதன் தொடர்ச்சியாக ஆர்யா - சாயிஷா திருமணம் வரும் மார்ச் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்லாமிய முறைப்படி நடைபெறும் இந்தத் திருமணம் மார்ச் 9 மற்றும் 10 என இரண்டு தினங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது.

இருவீட்டார் சம்மதம்:

இருவீட்டார் சம்மதம்:

இருவீட்டாரின் சம்மதத்தோடு இந்தத் திருமணம் நடைபெறும் எனத் தெரிகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்து தெரிவிக்கும் என்பதால் பிரமாண்ட திருவிழாவாக இந்த ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் தெரிகிறது.

திலீப்குமார் பேத்தி:

திலீப்குமார் பேத்தி:

வனமகன், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சாயிஷா. இவர் பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் - சாயிரா பானுவின் பேத்தி ஆவார். இந்தியில் அஜய் தேவ்கனுடன் ‘ஷிவாய்' படம் மூலம் அவர் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X