ஐரோப்பாவில் ஆர்யா, சயீஷா: வைரலாகும் க்யூட் புகைப்படம்
Recommended Video
சென்னை: நடிகை சயீஷா தனது கணவர் ஆர்யாவுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
ஆர்யாவும், நடிகை சயீஷாவும் கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு இருவரும் அவரவர் படங்களில் பிசியாக உள்ளனர். உனக்குத் தான் திருமணமாகிவிட்டதே இனி நீ வீட்டை பார்த்துக் கொள், நான் நடித்து சம்பாதிக்கிறேன் என்று சொல்லும் கணவர் இல்லை ஆர்யா.
மாறாக உனக்கு நடிக்கத் தான் பிடிக்கிறது என்றால் அதை தாராளமாக செய், நான் இருக்கிறேன் என்று ஆதரவாக இருக்கும் கணவராக உள்ளார் ஆர்யா.
சயீஷா
ஆர்யாவும், சயீஷாவும் சேர்ந்து ஐரோப்பாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா சென்ற இடத்தில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் சயீஷா. அவர் ஒவ்வொரு முறை புகைப்படம் வெளியிடும்போதும், ட்வீட் செய்யும்போதும் கணவரை பற்றி பெருமைப்படுப்படுவது நன்றாக தெரிகிறது.

ஆர்யா
திருமணத்திற்கு பிறகு படங்களை தேர்வு செய்யும் விதத்தை ஆர்யா மாற்றியுள்ளாராம். பொறுப்பான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறாராம் அவர். ஆர்யாவா, அந்த ஆளுக்கு பிக்கப் டிராப் தான் வரும் என்று கிண்டல் செய்தவர்கள் எல்லாம் தற்போது அவர் பொறுப்பான கணவராக இருப்பதை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

சூர்யா
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சயீஷா உள்ளிட்டோர் நடித்துள்ள காப்பான் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாக உள்ளது. அந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சயீஷா. அவர்களுக்கு திருமணமான பிறகு வெளியாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது என்றே கூற வேண்டும். சூர்யாவுக்காக எதிர்பார்ப்பு இல்லையா என்று நினைக்க வேண்டாம். சூர்யா ரசிகர்கள் காப்பானுக்காக மரண வெயிட்டிங் பாஸ்.

யுவரத்னா
திருமணத்திற்கு பிறகு ஆர்யாவும், சயீஷாவும் ஜோடியாக நடித்து வரும் படம் டெடி. ரியல் ஜோடியை ரீல் ஜோடியாக திரையில் காட்டுவதால் அந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் சயீஷா புனித்ராஜ்குமாரின் யுவரத்னா படம் மூலம் கன்னட திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். ஆர்யா, சயீஷா சமூக வலைதளங்களில் கொஞ்சிக் குலாவாமல் நாகரீகமாக நடந்து கொள்வது ரசிகர்களுக்கு பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











