ஆர்யா-சயீஷாவுக்கு அடித்த யோகம்

By Siva

Recommended Video

ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு கோலாகலமாக சென்னையில் இன்று நடக்கிறது- வீடியோ

சென்னை: திருமணம் முடிந்த கையோடு ஆர்யா, சயீஷா ஜோடியாக நடிக்க உள்ளனர்.

நடிகர் ஆர்யா, நடிகை சயீஷா திருமணம் கடந்த 10ம் தேதி ஹைதராபாத்தில் நடந்தது. அதே நாளில் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் டெடி படத்தின் ஷூட்டிங் துவங்கியது.

ஞானவேல்ராஜா தயாரிக்கும் அந்த படத்திற்கு இசையமைக்கிறார் டி. இமான்.

சயீஷா

சயீஷா

டெடி படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவரின் மனைவி சயீஷா தான் நடிக்கிறார். படப்பிடிப்பு மே மாதம் முதல் தீவிரமாக நடக்குமாம். குழந்தைகள், இளசுகளுக்கு ஏற்ற படமான டெடியின் ஷூட்டிங் சென்னை மற்றும் ஐரோப்பாவில் நடக்கிறதாம்.

டெடி

டெடி

கஜினிகாந்த், காப்பான் படங்களை அடுத்து ஆர்யா, சயீஷா டெடி படத்தில் சேர்ந்து நடிக்கிறார்கள். திருமணமான உடன் ரியல் ஜோடி ரீல் ஜோடியாக நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

சினிமா

திருமணமான பிறகு நடிக்கக் கூடாது என்று கன்டிஷன் போடும் ஆள் இல்லை ஆர்யா. மனைவி தனது இஷ்டம் போன்று நடிப்பை தொடரலாம் என்று கூறிவிட்டாராம். சயீஷா டெடி தவிர்த்து கன்னட படமான யுவரத்னாவில் புனித் ராஜ்குமார் ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவரத்னா

புனித் ராஜ்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள சயீஷா, யுவரத்னா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். யுவரத்னா படம் மூலம் சாண்டல்வுட்டில் அறிமுகமாகிறார் சயீஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X