அஜித், சூர்யா மாதிரியில்ல ஆர்யா.. சாயிஷா கொடுத்து வச்சவங்க தான்!

டெடி படத்தில் ஆர்யாவும், சாயிஷாவும் சேர்ந்து நடிக்க இருக்கின்றனர்.

By Staff

Recommended Video

Arya Sayeesha: ஆர்யா, சாயிஷா ஜோடி சேர்ந்து நடிக்கும் புதிய படம்

சென்னை: திருமணத்திற்குப் பிறகு ஆர்யா, சாயிஷா ஜோடி சேர்ந்து நடிக்கும் புதிய படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது.

கஜினிகாந்த் படத்தில் சேர்ந்து நடித்தபோது காதலில் விழுந்தனர் ஆர்யாவும், சாயிஷாவும். அதனைத் தொடர்ந்து காப்பான் படத்திலும் சூர்யாவுடன் இந்த ஜோடி சேர்ந்து நடித்தனர். காதலர் தினத்தன்று இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்தி, தற்போது திருமணம் முடிந்து தம்பதி ஆகிவிட்டனர்.

இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு மீண்டும் இருவரும் சேர்ந்து நடிக்க உள்ளனர். இப்படத்திற்கு டெடி எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்தை சக்தி சவுந்தரராஜன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே நாணயம், மிருதன், நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கியவர்.

ஆக்சன் திரில்லர்:

ஆக்சன் திரில்லர்:

ஆக்சன் திரில்லர் படமாக இப்படம் உருவாக உள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகராஜா ரங்கூஸ்கி, பர்மா, ஜாக்சன் துரை ஆகிய படங்களில் கெத்து காட்டிய யுவா ஒப்பந்தமாகியுள்ளார். இசை டி. இமான். திமிரு பிடித்தவன், காளி படங்களில் சிறப்பான சண்டைக்காட்சிகளை அமைத்த சக்தி சரவணன் ஸ்டண்ட் மாஸ்டராக களம் இறங்க, படத்தொகுப்பை சிவநந்தீஸ்வரன் கவனித்துக் கொள்கிறார்.

படப்பிடிப்பு தொடக்கம்:

படப்பிடிப்பு தொடக்கம்:

இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெற இருக்கிறது. ஆர்யா சாயிஷா திருமணத்திற்குப் பின் ஒன்றாக நடிக்கும் படம் என்பதால், இருவரது ரசிகர்களிடம் படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சூர்யா, அஜித்:

சூர்யா, அஜித்:

சூர்யா - ஜோதிகா, அஜித் - ஷாலினி போன்றோரும் படத்தில் சேர்ந்து நடித்த போது காதல் வயப்பட்டு தான், ரியல் ஜோடி ஆனார்கள். ஆனால் திருமணத்திற்குப் பின்பு இவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை. ஷாலினி நடிப்பிற்கே குட்பை சொல்லிவிட்டு தனக்குப் பிரியமான விளையாட்டில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார்.

ரசிகர்கள் ஆசை:

ரசிகர்கள் ஆசை:

ஜோதிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார். மீண்டும் சூர்யா - ஜோதிகா தம்பதியை திரையில் ஒன்றாக பார்க்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக உள்ளது. சூர்யாவும் நல்ல கதைக்காக வெயிட்டிங் எனக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X