கல்யாணத்தை வச்சுக்கிட்டு இந்த ஆர்யா, சயீஷா செய்ற வேலையை பாருங்க
சென்னை: ஆர்யாவும், சயீஷாவும் திருமணம் நடந்த நாள் அன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்களேன்.
நடிகர் ஆர்யா, நடிகை சயீஷா திருமணம் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. முன்னதாக நேற்று மாலை சங்கீத் நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு போட்டோஷூட்டில் இருவரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஆர்யாவும் சரி, சயீஷாவும் சரி இன்று கூட ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளனர்.
புகைப்படம்
போட்டோஷூட்டின்போது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஆர்யா.
சயீஷா
என்றும் என் காதல் என்று கூறி ஆர்யா வெளியிட்ட அதே புகைப்படங்களை ட்விட்டரில் போஸ்ட் செய்துள்ளார் சயீஷா.
டெடி
ஆர்யாவின் புதுப்படமான டெடியின் ஷூட்டிங் இன்று துவங்கியது. தலைப்பை நேற்று வெளியிட்டனர். அது குறித்து ஆர்யா ட்வீட்ட அதை பார்த்த சயீஷா சூப்பர் என்று தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள்
ஆர்யா, சயீஷா திருமணம் நடக்கும் நாள் அன்று கூட ட்வீட் செய்வதை பார்த்து சிலர் கலாய்த்தாலும் அவர்களுக்கு பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











