ஆர்யாவுடன் சேர்ந்து 'தல பெருநாள்' கொண்டாடிய சயீஷா: வைரல் போட்டோ

By Siva

Recommended Video

TV artistes celebrated Ramzan: ரம்ஜான் கொண்டாடிய நட்சத்திரங்கள்- வீடியோ

சென்னை: திருமணம் முடிந்த பிறகு முதல் ரம்ஜானை கணவருடன் சேர்ந்து கொண்டாடியபோது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சயீஷா.

ஆர்யாவும், சயீஷாவும் ஹைதராபாத்தில் கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அவரவர் படங்களில் பிசியாக உள்ளனர். திருமணம் முடிந்து விட்டது இனி நீ வீட்டோடு இருக்க வேண்டும் என்று சொல்லும் ஆள் இல்லை ஆர்யா. அந்த காரணத்தால் சயீஷா தொடர்ந்து படங்களில் சந்தோஷமாக நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு ஆர்யாவும், சயீஷாவும் நேற்று தலப் பெருநாளை(ரம்ஜான் பண்டிகை) குடும்பத்துடன் கொண்டாடினார்கள். அப்பொழுது எடுத்த புகைப்படத்தை ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சயீஷா.

சயீஷா

புகைப்படத்தில் ஆர்யா, சயீஷா, அவரின் அம்மா ஷாஹீன் ஆகியோர் உள்ளனர். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் ஆர்யாவுக்கும், சயீஷாவுக்கும் இடையே உள்ள வயது வித்தியாசத்தை சுட்டிக் காட்டி கிண்டல் செய்துள்ளனர். 17 வயது வித்தியாசம் இருப்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு பிரச்சனையாக தெரியவில்லை. அப்படி இருக்கும் போது அதை சொல்லி சொல்லிக் காட்டி கலாய்ப்பது தவறு ஆகும்.

வயது வித்தியாசம்

வயது வித்தியாசம்

ஒரு சில நெட்டிசன்களோ சயீஷா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து அப்பா, அம்மா, மகள் என்று கமெண்ட் போட்டுள்ளனர். இப்படி கமெண்ட் போடுவது மிகவும் தவறு. ஆர்யா தன்னை விட பெரியவர் என்பது தெரிந்து தான் சயீஷா திருமணம் செய்து கொண்டார். அவரே சந்தோஷமாக இருக்கும்போது இப்படி கமெண்ட் போடாமல் இருப்பது நல்லது.

டெடி

டெடி

திருமணத்திற்கு முன்பு ஆர்யாவும், சயீஷாவும் சேர்ந்து கஜினிகாந்த், காப்பான் ஆகிய படங்களில் நடித்தனர். இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு அவர்கள் டெடி படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள். ரியல் ஜோடியை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மேலும் காப்பான் ரிலீஸுக்காவும் ரசிகர்கள் மரண வெயிட்டிங் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா

ஆர்யா தனக்கு கேன்யன் சைக்கிள் கிடைத்த மகிழ்ச்சியில் அதை அழகி என்று தெரிவித்துள்ளார். ஆர்யா பாரீஸ் பிரெஸ்ட் பாரீஸ் 2019 சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார். இந்நிலையில் கேன்யன் சைக்கிள் கிடைத்த மகிழ்ச்சியை அவர் ட்விட்டரில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X