திருமணத்திற்கு முந்தைய நாள் 'ரவுடி பேபி'யாக மாறிய சயீஷா
Recommended Video

ஹைதராபாத்தில் அமர்க்களமாக நடந்த ஆர்யா, சயீஷா திருமணம்- வீடியோ
சென்னை: ஆர்யாவும், சயீஷாவும் தனுஷின் ரவுடி பேபி பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளனர்.
நடிகர் ஆர்யா, சயீஷா திருமணம் ஹைதராபாத்தில் கடந்த 10ம் தேதி நடைபெற்றது. முன்னதாக சங்கீத் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் ஆர்யாவும், சயீஷாவும் சேர்ந்து டான்ஸ் ஆடினார்கள்.

அவர்கள் தனுஷின் மாரி 2 படத்தில் வந்த ரவுடி பேபி பாடலுக்கு நடனம் ஆடினார்கள். அவர்கள் நடனம் ஆடியபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
ஆர்யா, சயீஷாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 14ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத்தில் திருமணம் நடந்ததால் பலரால் அங்கு செல்ல முடியாமல் போன நிலையில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











