ஹைதராபாத்தில் 2 நாட்கள் கோலாகலமாக நடக்கும் ஆர்யா-சயீஷா திருமணம்
Recommended Video

சென்னை: ஆர்யா, சயீஷா திருமண விபரம் தெரிய வந்துள்ளது.
நடிகர் ஆர்யா, நடிகை சயீஷா திருமணம் வரும் 10ம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் திருமணம் எங்கு நடக்கிறது என்ற விபரம் வெளியாகியுள்ளது.

அவர்களின் திருமணம் சென்னையில் அல்ல மாறாக ஹைதராபாத்தில் நடக்கிறது. மார்ச் 9ம் தேதி மாலை சங்கீத் நிகழ்ச்சியும், மறுநாள் நிக்காவும் நடைபெறுகிறது. ஆர்யா-சயீஷா திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து சென்னையில் திருமண வரவேற்பு நடக்கும் என்று கூறப்படுகிறது. சயீஷா தற்போது கன்னட பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது காதல் திருமணம் அல்ல, பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணம் என்று சயீஷாவின் அம்மா ஷஹீன் தெரிவித்திருந்தார். ஆர்யா தங்கள் வீட்டு மாப்பிள்ளையாவதில் ஷஹீன் பெருமிதம் கொண்டுள்ளார்.
ஆர்யா காப்பான் பட வேலையை முடித்த பிறகே பத்திரிகை கொடுக்கும் வேலையை துவங்கியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











