சத்தமில்லாமல் நடந்த ஆர்யா-சாயிஷா சங்கீத் நிகழ்ச்சி.. நாளை டும் டும் டும்!

ஆர்யா- சாயிஷா சங்கீத் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

Recommended Video

ஹைதராபாத்தில் 2 நாட்கள் கோலாகலமாக நடக்கும் ஆர்யா-சயீஷா திருமணம்- வீடியோ

ஹைதராபாத்: நடிகர் ஆர்யா - சாயிஷா திருமணம் நாளை நடைபெற இருக்கிறது. அதையொட்டி நேற்று சங்கீத் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் அனைவராலும் நல்லவர் எனக் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ஆர்யா. எப்போதுமே தன்னைச் சுற்றி இருப்பவர்களை கலகலப்பாக வைத்துக் கொள்வதில் வல்லவர். இதனாலேயே அவருடன் பழகிய அனைவருக்கும் அவரை மிகவும் பிடிக்கும்.

கஜினிகாந்த் படத்தில் நடித்த போது, ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நாளை நடைபெறுகிறது.

நேரில் அழைப்பு:

நேரில் அழைப்பு:

இதற்காக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் உட்பட பலரையும் சந்தித்து நேரில் அழைப்பு விடுத்துள்ளார் ஆர்யா. சாயிஷா பிரபல பாலிவுட் பழம்பெரும் நடிகர் திலீப்குமாரின் பேத்தி என்பதால், பாலிவுட் பிரபலங்களும் இந்தத் திருமணத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கீத் நிகழ்ச்சி:

சங்கீத் நிகழ்ச்சி:

இவர்களது திருமணக் கொண்டாட்டங்கள் நேற்றே ஆரம்பமாகி விட்டது. ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்பட பல திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

நாளை திருமணம்:

நாளை திருமணம்:

இன்று மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நாளை திருமணம் நடைபெறுகிறது. இதில் தமிழ்த் திரையுலகப் பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.

எங்க வீட்டு மாப்பிள்ளை:

எங்க வீட்டு மாப்பிள்ளை:

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட திருமணங்களில் ஒன்று ஆர்யாவுடையது. அவருக்கு பெண் தேடுவதற்காக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற சுயம்வரம் போன்ற நிகழ்ச்சிகூட நடைபெற்றது. ஆனாலும் அதிலும் தன் வருங்கால மனைவியை ஆர்யா தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X