'எல்லாத்துலயும் நீ தான் பெஸ்ட்.. ஆர்யாவுக்கு காதலுடன் நன்றி சொன்ன சாயிஷா'.. ரசிகர்கள் வாழ்த்து!
டெடி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை டிவிட்டர் மூலம் தெரியப்படுத்தியுள்ளார் நடிகை சாயிஷா.
சென்னை: டெடி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக நடிகை சாயிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு நடிகர் ஆர்யாவும், அவரது மனைவி நடிகை சாயிஷாவும் சேர்ந்து நடித்து வரும் படம் டெடி. இந்த படத்தை சக்தி செளந்திரராஜன் இயக்கி வருகிறார். இயக்குனர் மகிழ்திருமேனி, சதீஷ், கருணாகரன், பிக் பாஸ் சாக்ஷி, உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

டெடி படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகை சாயிஷா பதிவிட்டுள்ளார். ஒட்டுமொத்த படக்குழுவும் இருக்கும் புகைப்படம், கணவர் ஆர்யா, சதீஷ், கருணாகரன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் உள்ளிட்டவைகளை சாயிஷா பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் அவர், "சக்தி செளந்திரராஜன் ஒரு திறமையான இயக்குனர் மற்றும் அருமையான மனிதர். உங்களுடைய குழுவில் என்னையும் இணைத்துக்கொண்டதற்கு நன்றி. எதிலும் பெஸ்டாக இருக்கும் என் காதல் ஆர்யாவுக்கு நன்றி', என குறிப்பிட்டுள்ளார். சாயிஷாவின் இந்த டிவீட்டுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கண்களில் திடீர் வீக்கம் வீங்கி.. என்ன ஆனது?.. விசித்திர நோயால் போராடும் 6 மாத சிறுவன்..உதவுங்கள்!


Click it and Unblock the Notifications











