இதென்ன புதுக்கதையா இருக்கு.. ஆர்யா, சாயிஷா காதலிக்கவே இல்லையாமே!
ஆர்யா, சாயிஷா திருமணம் காதல் திருமணமல்ல, பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பது தெரிய வந்துள்ளது.
சென்னை: நடிகர் ஆர்யா, சாயிஷாவின் திருமணம் காதல் திருமணமல்ல, பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
Recommended Video

நீண்டகாலமாக தமிழ் சினிமாவில் பேச்சிலராக இருந்து வரும் விஷாலும், ஆர்யாவும் அடுத்தடுத்து தங்களது திருமணச் செய்தியை அறிவித்துள்ளனர். தன்னுடன் நடித்த பெரும்பாலான நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்ட ஆர்யா, ஒரு வழியாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு காதலர் தினத்தை முன்னிட்டு ஆர்யா, சாயிஷாவுடனான தன் திருமணத்தை டிவிட்டர் வாயிலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஆர்யா- சாயிஷா காதல்:
ஏற்கனவே கடந்த சில வாரங்களாக இவர்களது திருமணம் பற்றிய யூகங்கள் செய்திகளாக உலா வந்தன. கஜினிகாந்த் படத்தில் சேர்ந்து நடித்த போது, அவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததாகக் கூறப்பட்டது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
சாயிஷாவை விட வயதில் மூத்தவரான ஆர்யாவையும், சாயிஷாவையும் வைத்து மீம்ஸ்களும் வெளி வந்தன. இந்தத் திருமணத் தகவலும் வதந்தி தான் என்றும் கூறப்பட்டது. ஆனால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காதலர் தினத்தன்று தங்களது திருமணத்தகவலை ஆர்யாவும், சாயிஷாவும் உறுதி செய்தனர்.

காதல் திருமணமல்ல:
பெற்றோர் சம்மதத்துடன் இந்தத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அதில் அவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் அவர்களது திருமணம் காதல் திருமணம் என ரசிகர்கள் கருதி வந்தனர். ஆனால், உண்மையில் இது காதல் திருமணமல்ல என்ற புதிய தகவலை வெளியிட்டுள்ளார் சாயிஷாவின் அம்மா.

அம்மா பேட்டி:
இந்நிலையில், சாயிஷாவின் அம்மா ஷாஹீனி அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘ஆர்யா- சாயிஷா திருமணம் காதல் திருமணம் என்று அனைவரும் நினைக்கிறார்கள். உண்மையில் இது இரு குடும்பத்தாரும் சேர்ந்து எடுத்த முடிவு.

மகிழ்ச்சி:
ஆர்யாவின் குடும்பத்தாருக்கு சாயிஷாவைப் பிடித்துப் போனதால் அவர்கள் இது தொடர்பாக எங்களிடம் பேசினார்கள். எங்களுக்கும் ஆர்யா போல் ஒருவருக்கு சாயிஷாவைத் திருமணம் செய்து வைப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











