'தல... உங்களுக்கே இந்த நிலமைன்னா...' - ஆர்யாவுக்காக கண்ணீர்விடும் நெட்டிசன்ஸ்
Recommended Video

சென்னை : ஆர்யா சில நாட்களுக்கு முன் ஜிம்மில் தனது நண்பர்களிடம் தனக்கு திருமணம் செய்துகொள்ள பெண்ணே கிடைக்கவில்லை என்று புலம்பினார்.
அந்த வீடியோ லீக் ஆகி செம்ம வைரல் ஆனது. தற்போது அதற்கு விளக்கம் அளித்து ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
'கடந்த வாரம் எனக்கு திருமணம் செய்ய பெண் வேண்டும் என்று ஜிம்மில் பேசினேன். அது உண்மை தான், என் நண்பர்கள் சிலர் அதை எனக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வெளியிட்டார்கள் எனக் கூறியுள்ளார் ஆர்யா.
ஆர்யா வெளியிட்ட வீடியோ
நான் இதை விளையாட்டாக சொல்லவில்லை. எனக்கு உண்மையாகவே லைஃப் பார்ட்னர் வேண்டும், உங்களுக்கு என்னை பிடித்தால் இந்த நம்பருக்கு போய் செய்யுங்கள் என்று ஒரு நம்பரையும் கொடுத்துள்ளார். ஆர்யா.
உனக்கே இந்த நிலமையா
தலைவா... உனக்கே இந்த நிலமையா..? என ரசிகர் ஒருவர் பரிதாபமாக ரிப்ளை செய்துள்ளார்.
ஆர்யாவுக்கு வந்த சோதனை
இது என்னடா ஆர்யாவுக்கு வந்த சோதனை என ரசிகர் ஒருவர் வாழைப்பழ காமெடி போட்டோவுடன் ரிப்ளை செய்துள்ளார்.
எந்த ஹீரோயின் மாதிரி பொண்ணு
கடைசியா என்னோட ஹீரோ, நண்பன், இந்த சிட்டியிலயே மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் ஆர்யா சீக்கிரம் கல்யாணம் பண்ணப்போறார்னு நினைக்கிறேன். வெல்கம் டு தி க்ளப் மச்சான். எந்த ஹீரோயின் மாதிரி பொண்ணு வேணும்னு மென்சன் பண்ணவே இல்லியே என இயக்குநர் ராஜேஷ் ஆர்யாவுக்கு ரிப்ளை செய்துள்ளார்.
நாங்கள்லாம் அகோரி தானா
என்ன ப்ரோ.. நீங்களே இப்படி தேட ஆரம்பிச்சிட்டீங்க.. அப்போ நாங்கள்லாம் அகோரியா தான் திரியணும் போல
பெருமையா இருக்கு
ட்விட்டர் பெண்கள் : எங்களையும் நல்ல பொண்ணுங்கனு நம்பி இந்த வீடியோவ போட்டீங்க பாத்தீங்களா...அதை நெனைச்சா ரொம்ப பெருமையா இருக்கு.
இதுக்கெல்லாம் ரெடியா
இதுக்கெல்லாம் இப்பவே ரெடி ஆகிக்கோங்க... என வடிவேலுவை வெளுக்கும் கோவை சரளாவின் படத்தைப் போட்டுள்ளார் ரசிகர் ஒருவர்.
ஃபீல் ஆகிட்டாப்ள
நல்ல தொடக்கம்.. புது ட்ரெண்ட ஆரம்பிச்சு வச்சுருக்கீங்க ப்ரோ... ஃப்ரெண்டு... லைஃப் மேட்டரு... ஒரு லைஃப் பார்ட்னர் கிடைச்சா கூல் ஆகிடுவாப்ள.
மொரட்டு சிங்கிள்
இவருதான்யா மொரட்டு சிங்கிள்! என்ன தைரியம் பார்த்தியா... கடைசியில.. ஓப்பனா பொண்ணு கிடைக்கல... யாராவது கட்டிக்கோங்கனு சொல்றாரு.
சீமையில இருந்து பொண்ணு
என்ன ஆர்யா சார், உங்க அழகுக்கும் அறிவுக்கும் படிப்புக்கும் பணத்துக்கும் நீங்க இருக்கிற பொசிஸனுக்கும் சீமையில இருந்து பொண்ணு வரும்
யுகமே ஆனாலும்
என்ன தலைவா நீங்களே இந்த நிலமைக்கு வந்துட்டீங்க. அப்படின்னா எங்களுக்கெல்லாம் ஒரு யுகமே ஆனாலும் பொண்ணு கிடைக்காது போல
கம்முனு இருக்குமே
ஐயோ ஆர்யா... ஐ வில் மேரி யூ ன்னு கத்துற கேஸ்லாம் இப்போ கம்முனு இருக்குமே
பொண்ணுக தூக்கம் கெட்டு அலையும்
நீ வேற டார்லிங்... இந்நேரம் தமிழ்நாட்ல இருக்குற அத்தனை அழகான பொண்ணுங்களும் கிளம்பிருக்குமே... பாவம் எத்தனை பொண்ணுக தூக்கம் கெட்டு அலையப் போகுதோ..! எப்படியோ உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே!


Click it and Unblock the Notifications











