Nayanthara - நயன்தாராவுக்கு அது மட்டும் செய்ய தெரியாது - சீக்ரெட் சொன்ன ஆர்யா

சென்னை: Nayanthara (நயன்தாரா) நடிகை நயன்தாரா குறித்து ஆர்யா சொன்ன சீக்ரெட் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோலிவுட் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் ராஜா ராணி மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதனையடுத்து அவர் நடித்த ஆரம்பம், நானும் ரௌடிதான், அறம் உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டடித்தன. குறிப்பாக கோபி நயினார் இயக்கத்தில் அவர் நடித்த அறம் படம் அவரது இமேஜை வெகுவாகவே உயர்த்தியது.

காதல்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். பல காலம் லிவிங் டூகெதரில் இருந்த அவர்கள் கடந்த ஆண்டு மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். சில நாள்களுக்கு முன்னர் இருவரும் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின.

ஹிந்தியில் நயன்: திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் சுமாரான வரவெற்பைப் பெற்றன. எனவே அவரது மார்க்கெட் சரிந்துவிட்டதாக சிலர் கூறினர். ஆனால் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் நயன் தாராவே ஹீரோயினாக நடிக்கிறார். அதுமட்டுமின்றி தமிழிலும் தனது 75ஆவது படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இதனால் தலைவியின் மார்க்கெட் என்றுமே குறையாது என நயனின் ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர்.

ஆர்யா பகிர்ந்த ரகசியம்: இந்நிலையில் காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படத்தின் புரோமோஷனுக்காக கலந்துகொண்ட ஆர்யா நயன் குறித்து பேசுகையில், "நயன் தாராவுடன் லாங் டிரைவ் செல்ல வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் என்ன அவருடன் லாங் டிரைவ் போகும்போது நாம்தான் கார் ஓட்ட வேண்டும்.ஏனென்றால் அவருக்கு கார் ஓட்ட் தெரியாது" என்றார். இதனையடுத்து நயனுக்கு கார் ஓட்ட தெரியாதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

Arya Shares a secret about Nayanthara

நயன் - ஆர்யா: நயன்தாராவும் ஆர்யாவும் முதல்முதலாக பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இணைந்து நடித்தனர். அந்தப் படம் மெகா ஹிட்டானது. படம் மெகா ஹிட்டானதோடு மட்டுமினிறி நயனும், ஆர்யாவும் சிறந்த நண்பர்களாக மாறினர். அதனையடுத்து இரண்டு பேரும் இணைந்து நடித்த ராஜா ராணி படமும் மெகா ஹிட்டானது. குறிப்பாக அந்தப் படத்தில் இரண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி அட்டகாசமாக இருந்தது என்று ரசிகர்கள் படம் வந்த சமயத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா கிராஃப்: ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த வாரம் காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படம் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து அவர் பா.இரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று எதிரபர்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X