எம்மாடி டிஎம்டி முறுக்கு கம்பி தோத்துடும் போல.. சிக்ஸ்பேக்கில் மிரட்டும் ஆர்யா.. என்ன படம் தெரியுமா?
சென்னை: நடிகர் ஆர்யாவின் அதிரடியான முரட்டு சிக்ஸ்பேக் உடம்பை பார்த்த கோலிவுட் ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் பாக்ஸிங் படத்திற்காகத் தான் நடிகர் ஆர்யா இப்படி ஒரு சிக்ஸ்பேக்கை வைத்துள்ளாராம்.
நேற்று முதுகை காட்டி மிரட்டிய ஆர்யா, தற்போது, முன்பக்கத்தை காட்டி, ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

சல்பேட்டா பரம்பரை?
அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கி பிரபலமான பா. ரஞ்சித்துக்கு, ரஜினியின் கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கினார். தற்போது, நடிகர் ஆர்யா - பா. ரஞ்சித் காம்போவில் உருவாக உள்ள இந்த படத்திற்கு சல்பேட்டா பரம்பரை என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

பாலிவுட் என்னாச்சு?
ரஜினியின் கபாலி மற்றும் காலா படங்களை இயக்கிய பா. ரஞ்சித்துக்கு, தேசிய அளவில் பிரபலம் கிடைத்தது. காலா படத்தைத் தொடர்ந்து, இந்திய போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை பாலிவுட்டில் இயக்கப் போவதாக அறிவித்த பா. ரஞ்சித், அதன் ஆரம்ப பணிகளை கவனித்து வருகிறார். அதற்கு இடையே, ஆர்யாவின் படத்தை இயக்க உள்ளார்.

வில்லன் யார் தெரியுமா?
ஆர்யாவின் மீகாமன், அருண் விஜய்யின் தடம் படத்தை இயக்கிய வெற்றி இயக்குநர் மகிழ் திருமேனி, இந்த படத்தில் ஆர்யாவுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மீகாமன் படத்தில் ஆர்யா - ஹன்சிகாவை இயக்கி இருந்த மகிழ் திருமேனி தமிழ் சினிமாவில் வித்தியாசமான வில்லன் அவதாரத்தை எடுக்க உள்ளார்.
மிரட்டும் சிக்ஸ்பேக்
பா. ரஞ்சித் இயக்கத்தில், வடசென்னையை மையப்படுத்தி உருவாக உள்ள பாக்ஸிங் திரைப்படத்தில், நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி நடித்து வருகின்றனர். இந்த படத்திற்காக, மிரட்டும் சிக்ஸ்பேக்கை வைத்துள்ளார் ஆர்யா. மேலும், இன்று மாலை 5 மணிக்கு, தனது 30வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
முறுக்கு கம்பி
இன்று முன் பக்கத்தை காட்டி மிரட்டியுள்ள ஆர்யா, நேற்றே தனது ட்விட்டர் பக்கத்தில், முறுக்கு ஏறிய தனது உடம்பின் பின் பக்க போஸை பகிர்ந்து, நாளை 5 மணிக்கு ஆர்யா 30 படத்தின் அறிவிப்பு வருகிறது என ட்வீட் போட்டு டிரெண்ட் செய்தார். ஆர்யாவின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், டிஎம்டி முறுக்கு கம்பியே தோத்துடும் போல, என கமெண்ட் செய்துள்ளனர்.
கோலிவுட்டின் ஹல்க்
ஆர்யாவின் முரட்டுத் தனமான இந்த சிக்ஸ்பேக் பாடியை பார்த்த அவரது ரசிகர்கள், அந்த புகைப்படங்களை வைரலாக ஷேர் செய்தும், தங்களது டிபி புகைப்படமாகவும் வைத்து வருகின்றனர். இந்த ரசிகர், ஒரு படி மேலே போய், கோலிவுட்டின் ஹல்க் என்ற ரீதியில், ஹல்கின் வீடியோ க்ளிப்பை ஷேர் செய்துள்ளார்.
காட்டுத்தனமா இருக்கீங்க
சாந்த குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான மகாமுனி படத்தில், இரட்டை வேடத்தில், தனது மிரட்டலான நடிப்பை நடிகர் ஆர்யா வெளிப்படுத்தி இருந்தார். உலகத் தரம் வாய்ந்த சினிமாவாக அந்த படம் இருக்கிறது என பாராட்டி இருந்தனர். ஆர்யாவின் சிக்ஸ் பேக் உடம்பை பார்த்த சூர்யா ரசிகர்கள், காட்டுத்தனமா இருக்கீங்க, என வாழ்த்துக்கள் கூறியுள்ளனர்.
Recommended Video
தமிழ்நாடு அர்னால்டு
ஐ படத்தில் நடிகர் விக்ரம் கட்டுமஸ்த்தான உடம்பை வைத்து அர்னால்டு ஜிம் வைத்து நடத்தும் லிங்கேசனாக நடித்திருந்தார். தற்போது, ஆர்யாவின் இந்த காட்டுத்தனமான கட்டுமஸ்த்தான உடம்பை பார்த்த ரசிகர்கள், தமிழ்நாடு அர்னால்டு, என்றும், என்ன உடம்பு சாமி என்றும் கமெண்ட்டுகளை தெறிக்க விடுகின்றனர்.


Click it and Unblock the Notifications











