டெடி 2 படம் குறித்து ஆர்யா சொன்ன அதிரடி தகவல்.. தன்னோட டெடியையும் சூப்பரா அறிமுகப்படுத்தி ட்வீட்!

சென்னை: டெடி 2 படம் நிச்சயம் உருவாகும் என உறுதி அளித்துள்ளார் நடிகர் ஆர்யா.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான டெடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

விஜய் டிவியில் இன்று மாலை 5 மணிக்கு டெடி திரைப்படம் ஒளிபரப்பாவதை முன்னிட்டு இந்த வீடியோவை ஆர்யா வெளியிட்டுள்ளார்.

ஆர்யாவின் டெடி

ஆர்யாவின் டெடி

டிக் டிக் டிக், மிருதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா, சதீஷ், கருணாகரன் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி நடிப்பில் வெளியான படம் டெடி. ஹாலிவுட் தரத்தில் உருவான இந்த படம் குழந்தைகளின் ஃபேவரைட் ஆக மட்டுமின்றி பல இளைஞர்களின் ஃபேவரைட்டாகவும் மாறியது.

ஒடிடி ரிலீஸ்

ஒடிடி ரிலீஸ்

தியேட்டரில் இந்த படம் வெளியாகி இருந்தால் நிச்சயம் மிகப்பெரிய வசூல் வேட்டையை ஆடியிருக்கும். கொரோனா பரவல் காரணமாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த டெடி படம் வெளியானது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏகப்பட்ட குழந்தைகள் இந்த படத்தை கண்டு மகிழ்ந்தனர்.

விஜய் டிவியில்

விஜய் டிவியில்

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு விஜய் டிவியில் ஆர்யாவின் டெடி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. அதனை முன்னிட்டு நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் டெடி 2 படம் குறித்த சூப்பரான அப்டேட்டையும் கூறியுள்ளார்.

டெடி 2 ரெடியாகுது

டெடி 2 ரெடியாகுது

டெடி படத்திற்கு குழந்தைகள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் கொடுத்த பேராதரவுக்கு நன்றி. இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன் குழந்தைகளுக்காக டெடி 2 படத்தை உருவாக்க முயற்சித்து வருகிறார். நிச்சயம் டெடி 2 வரும் என நடிகர் ஆர்யா இந்த வீடியோ மூலம் ரசிகர்களுக்கு சிக்னல் கொடுத்துள்ளார்.

என்னோட டெடி

மேலும், விஜய் டிவியில் இன்று மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள டெடி படத்தை கண்டு ரசியுங்கள். நானும் என்னோட டெடியுடன் பார்க்கப் போகிறேன் என அந்த வீடியோவில் மனைவி சாயிஷாவையும் காண்பித்து ரசிகர்களுக்கு சூப்பர் சன் டே எக்ஸ்பீரியன்ஸை கொடுத்துளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X