சூர்யாவுக்கு ஆர்யா நன்றி, ஆர்யாவுக்கு சூர்யா பாராட்டு: இது என்னங்க இப்படி கொஞ்சிக்கிறாங்க?

சென்னை: நடிகர் ஆர்யா தற்போது சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் 'கேப்டன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஆர்யாவின் 'கேப்டன்' திரைப்படம் செப்டம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் அவர் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதில் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சாக்லேட் பாய் ஆர்யா

சாக்லேட் பாய் ஆர்யா

'அறிந்தும் அறியாமலும்' படம் மூலம் அறிமுகமான ஆர்யா, தனது ராவான நடிப்பால் ரசிகர்களை மிரட்டி வருகிறார். ரொமன்ஸ், காமெடி, ஆக்சன் என எல்லா ஜானரிலும் இறங்கி அடிக்கும் ஆர்யாவுக்கு ரசிகைகள் ரொம்பவே அதிகம். இறுதியாக அவர் நடிப்பில் வெளியான 'சார்பட்டா பரம்பரை', 'டெடி' இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் அடித்தன. "அரண்மனை 3, எனிமி" படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்றன.

கேப்டன் அவதாரம்

கேப்டன் அவதாரம்

சக்தி செளந்தர்ராஜன் இயக்கிய 'டெடி' படத்தில், ஆர்யாவும் அவரது மனைவி ஷாயிஷாவும் ஜோடியா நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியால், ஆர்யாவும் இயக்குநர் சக்தி செளந்தர்ராஜனும் 'கேப்டன்' படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இதுவும் 'டெடி' படம் போல, ரொம்ப வித்தியாசமான ஜானரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'கேப்டன்' செப்டம்பர் 8ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவுடன் ஆர்யா மீட்டிங்

சூர்யாவுடன் ஆர்யா மீட்டிங்

இந்நிலையில், தேசிய விருது வென்ற நடிகர் சூர்யாவுடன், ஆர்யா இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலானது. இந்தப் போட்டோவில் சூர்யாவிடம் இருந்து ஆர்யா 'கேப்டன்' என பிரிண்ட் செய்யப்பட்டுள்ள ஒரு ஜெர்சியை வங்குகிறார். ஆர்யாவுடன் மேலும் சிலரும் இந்தப் புகைப்படங்களில் உள்ளனர். ஜெர்சியை பெற்றுக்கொண்ட ஆர்யா, தேசிய விருது நாயகனுக்கு நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார்.

இதுதானா விசயம்

இதுதானா விசயம்

ஆர்யா நடிப்பது மட்டும் இல்லாமல், சைக்கிளிங் செல்வதிலும் கெட்டிக்காரர். சென்னையில் அதிகாலை 4 மணியளவில் ஆர்யா தனது குழுவினருடன் சைக்கிளிங் செல்வதை பார்க்க முடியும். அதுமட்டும் இல்லாமல், ஆர்யா பல சர்வதேச சைக்கிள் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், லண்டனில் நடைபெறும் சைக்கிள் போட்டியிலும், ஆர்யா தனது குழுவினருடன் கலந்துகொள்கிறார். இதற்கான ஜெர்சியை தான் சூர்யா ஆர்யாவுக்கு வழங்கியதாகத் தெரிகிறது.

ஆர்யா நன்றி சூர்யா பாராட்டு

ஆர்யா நன்றி சூர்யா பாராட்டு

இதையடுத்து இந்த ஜெர்ஸி புகைப்படங்களை டிவீட்டரில் ஷேர் செய்துள்ள ஆர்யா, சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பதிலுக்கு சூர்யாவும் ஆர்யாவுக்கும் அவரின் குழுவுக்கும், போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக் கூறியுள்ளார். அதேபோல், சூர்யா ரசிகர்களும் ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X