இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வில்லனாகும் நடிகர் ஆர்யா.... வெளியானது புதிய தகவல்!
சென்னை : ஆர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை நேரடியாக ஓடிடியில் வரும் ஜூலை 22-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
ஆர்யாவுக்கு கடைசியாக வெளியான டெடி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்று ஓடிடியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து தமிழில் வெற்றி படங்களை இயக்கி வந்த இயக்குனர் லிங்குசாமி இப்போது தெலுங்கில் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தை இயக்க இருக்க இதில் வில்லனாக நடிகர் ஆர்யா ஒப்பந்தமாகி இருப்பதாக தெரியவந்துள்ளது.

சார்பட்டா பரம்பரை
சமீபகாலமாகவே கதைத் தேர்வில் மிகவும் கவனத்துடன் இருந்து வரும் நடிகர் ஆர்யா நடித்திருந்த டெடி திரைப்படம் சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார்.

அமேசான் பிரைமில்
வடசென்னையில் 60 மற்றும் 70 களில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்தது ஆனால் கொரோனா பரவல் காரணமாக இப்பொழுது ஓடிடியில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூலை 22-ஆம் தேதி சார்பட்டா பரம்பரை அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

முடியும் தருவாயில்
பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த வரும் விஷால் மற்றும் ஆர்யா முதல் முறையாக எதிரிகளாக மாறி எனிமி படத்தில் நடித்து வருகின்றனர். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துபாயிலும் நடைபெற்று முடிந்துள்ளது. முடியும் தருவாயில் இருக்கும் இந்த படத்தின் போஸ்ட் புரோடக்சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது.

நடிகர் ஆர்யா
இந்த நிலையில் தமிழில் தொடர் வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்த இயக்குனர் லிங்குசாமி முதல் முறையாக தெலுங்கில் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். உப்பனா பட நடிகை கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. நேற்று இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் இதில் வில்லனாக நடிக்க மாதவன், அருண் விஜய் உள்ளிட்ட நடிகர்களின் பெயர்கள் அடிபட்டன ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications