ஆர்யா, விஷால் இணையும் எனிமி.. டைட்டிலே செம மாஸா இருக்கே!
சென்னை : தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக உள்ள விஷால் மற்றும் ஆர்யா பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் இப்போது இருவரும் எதிரியாகி உள்ளனர்.
இருவரும் தனித்தனி ரூட்டில் தனக்கான பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் இப்போது இந்த இரண்டு இளம் நடிகர்களும் ஒரே திரைப்படத்தில் நடிக்க உள்ளனர்.
விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் சக்ரா திரைப்படம் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் நிலையில் இப்போது இவர் ஆர்யாவுடன் இணைந்து நடிக்க இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சூப்பர் ஹிட் திரைப்படம்
தமிழ் சினிமாவில் தங்களுக்கான தனி ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள நடிகர் ஆர்யா மற்றும் விஷால் என இருவரும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

பாஸ் என்கிற பாஸ்கரன்
சண்டைக்கோழி, பாண்டிய நாடு, பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி என இவர்கள் நடித்த எக்கச்சக்கமான படங்கள் பாக்ஸ் ஆபீஸில் தெறிக்க விட்ட நிலையில் சமீபகாலமாக இவர்களின் திரைப்படங்கள் சுமாரான வெற்றியைப் பெற்று வருகிறது.

எதிரிகளாக
ஆர்யா மற்றும் விஷால் இருவரும் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வரும் நிலையில் இப்பொழுது இருவரும் இணைந்து முழு நீள திரைப்படத்தில் எதிரிகளாக நடிக்க உள்ளனர்.

மாஸான இயக்குனர்
விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் சக்ரா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், ஆர்யாவின் டெடி மற்றும் சல்பேட்டா போன்ற திரைப்படங்கள் விரைவில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இருவரும் இப்பொழுது மாஸான இயக்குனருடன் இணைந்துள்ளனர்.
Recommended Video

எனிமி
விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் வெளியான இருமுகன், அரிமா நம்பி, நோட்டா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்க ஆர்யா மற்றும் விஷால் நடிக்க இருக்கும் இந்த புதிய திரைப்படத்தின் டைட்டில் "எனிமி" என வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இதுவரை நண்பர்களாக இருந்த இவர்கள் இந்த படத்தில் எதிரிகளாக தோன்ற இருக்கும் நிலையில் அதனை காண ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











