சென்னை மெட்ரோவில் காதல் மனைவியுடன் ஜாலி ட்ரிப்.. பிரபல நடிகரை பார்த்து பெருமூச்சுவிடும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிரபல நடிகர் தனது மனைவியுடன் சென்னை மெட்ரோ ரயிலில் சுற்றிய போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. ஆக்ஷன், நகைச்சுவை என அசத்தி வருகிறார் நடிகர் ஆர்யா.

திடீர் ஜாக்பாக்ட்
நடிகர் ஆர்யாவுக்கு ரசிகர்களை காட்டிலும் ரசிகைகள் ஏராளம். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் பெண் தேடிக் கொண்டிருந்த ஆர்யாவுக்கு திடீரென ஜாக்பாட் அடித்தது.

காதல் திருமணம்
தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகும் இருவரும் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர்.

செம கோபம்
ஆனால் நடிகை சாயிஷாவுக்கும் ஆர்யாவுக்கும் இடையே படத்தில் நடிப்பது தொடர்பாக மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் கணவர் ஆர்யா மீது சாயிஷா செம கோபத்தில் இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.
மெட்ரோ ரயிலில்
இந்நிலையில் இருவரும் சென்னை மெட்ரோ ரயிலில் ஜாலியாக ஊர் சுற்றியது தெரியவந்துள்ளது. இருவரும் மெட்ரோ ரயிலில் சென்ற ஜாலி ட்ரிப் குறித்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஜம்மி பாய்
அதனை பார்த்த நெட்டிசன்கள், நாங்கள் மெட்ரோ ரயிலில் வரும்போது மட்டும் வராமல் இப்போது வந்திருக்கிறீர்களே என தெரிவித்து வருகின்றனர். நான் வரும்போது இருக்க மாட்டேங்கிறீயே ஜம்மி பாய் என்கிறார் இந்த நெட்டிசன்.
மீண்டும் படம் பண்ணுங்க
நீங்க சந்தானம் அண்ணா கூட மீண்டும் ஒரு படம் பண்ணுங்க என்று கூறுகிறார் இந்த ரசிகர்.
நானும் வந்து இருப்பேன்ல
சொல்லி இருந்தா நானும் வந்து இருப்பேன்ல அண்ணா.. க்யூட் கப்பிள் என்கிறார் இந்த நெட்டிசன்ஸ்.
கேட்சியா இருந்திருக்கும்
புரோ சென்னை மெட்ரோ லைப் வித் மை வொய்ப்னு போட்டுருந்தா இன்னும் கேட்சியா இருந்திருக்கும் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
எந்த ஏரியாவா இருக்கும்
எந்த ஏரியாவா இருக்கும்.. 2 நாளா மெட்ரோவில் சுத்துனோம் அப்போலாம் வராம இன்னைக்கு வந்து இருக்கீங்களே தல என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











