அந்த மாதிரி படத்தில் நடிக்கணும்: ஆர்யா ஆசை
Recommended Video

சென்னை: அடல்ட் காமெடி படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.
சந்தோஷ் பி. ஜெயக்குமார் இருட்டு அறையில் முரட்டுக் குத்து, கஜினிகாந்த் ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் கஜினிகாந்த் படத்தின் பார் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்யா பேசியதாவது,

ஆர்யா
கஜினிகாந்த் படத்தில் நியாபக மறதி எனக்கு இல்லை இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமாருக்கு தான். செட்டுக்கு வந்து என்னை பார்த்த பிறகு ஓ இன்று கஜினிகாந்த் ஷூட்டிங்க்ல என்பார். டேய் அந்த கஜினிகாந்த் பைல் எல்லாம் எடுத்துக் கொண்டு வா என்று தனது உதவியாளரிடம் கூறுவார்.

இயக்கம்
ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கும்போதிலும் சீன் போடாமல் டென்ஷன் ஆகாமல் கூலாக வேலை செய்பவர் சந்தோஷ். இயக்குனர் என்பதை தாண்டி என் நண்பர் ஆகிவிட்டார்.

நடனம்
சயீஷா பயங்கரமாக டான்ஸ் ஆடுவாங்க. ப்ராம்ப்டிங் சொன்னால் கூட ஏற்றுக் கொள்ள மாட்டாங்க சயீஷா. தமிழில் நான் தான் பேசுவேன் என்று அடம்பிடிப்பாங்க. இது ரொம்ப ஹேப்பியான படம். ரொம்ப என்ஜாய் பண்ணி நடித்திருக்கிறேன். உங்களுக்கு எல்லாம் பிடிக்கும் என நம்புகிறேன் என்றார் ஆர்யா.
வேண்டாம்
கஜினிகாந்த் குழு வேண்டாம் வலிக்குது, போதும் விட்டுறு இதுக்கு மேல நான் அழுதுடுவேன் ஃபைட்டிங் ஃபாதரு, லவ்விங் டாடட்ரு என்று வரும் பார் பாடலை வெளியிட்டுள்ளனர்.

ஆசை
இருட்டு அறையில் முரட்டுக் குத்து பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்யா அடல்ட் காமெடி படத்தில் நடிக்க ரொம்ப ஆசையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











