Don't Miss!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- News ஆக்கிரமிப்பு நிலமா? எவ வேலுவின் மனைவி தலைவராக உள்ள கல்லூரி உரிமத்தை ரத்து செய்ய மறுத்த ஹைகோர்ட்
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Finance புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தன் வீட்டில் அமர்ந்து தன்னுடைய படத்தை பார்க்கும் ஆர்யா.. மம்மி ஷேர் செய்த மாஸ் போட்டோ!
சென்னை: நடிகர் ஆர்யா தன் வீட்டில் அமேஸான் பிரைம்மில் சார்பட்டா பரம்பரை படத்தை பார்க்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. கடைசியாக அவரது நடிப்பில் டெடி படம் வெளியானது.
இந்நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்தார் நடிகர் ஆர்யா. இந்தப் படம் நேற்று இரவு அமேஸான் பிரைமில் வெளியானது.
சார்பட்டா பரம்பரை படம் குறித்து திரௌபதி இயக்குநர் விமர்சனம்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
ஆர்யாவின் அர்ப்பணிப்பு
படத்தை பார்த்த ரசிகர்கள் ஆர்யாவின் நடிப்பை பாராட்டி வருகிறார். குறிப்பாக உடலை வருத்திக்கொண்டு கதாப்பாத்திரமாகவே மாறிய ஆர்யாவின் அர்ப்பணிப்பு பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
Recommended Video
ஆர்யாவுக்கு பாராட்டு
நான் கடவுள், அவன் இவன் பட வரிசையில் சார்பட்டா பரம்பரையும் அவரது கேரியரில் முக்கியமான ஒரு படமாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் நடிகர் ஆர்யாவை பாராட்டி வருகின்றனர்.
தீயாய் பரவும் போட்டோ
இந்நிலையில் நடிகர் ஆர்யா தனது வீட்டில் அமர்ந்து அமேஸான் பிரைமில் தன்னுடைய நடிப்பில் வெளியாகியிருக்கும் சார்பட்டா பரம்பரை படத்தை பார்க்கும் போட்டோ வெளியாகியுள்ளது. இந்த போட்டோவை அவருடைய அம்மா தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
ரஞ்சித்தின் வேலை சிறப்பு
மேலும் இப்போதுதான் சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்தேன் சூப்பர் கேரக்டரைஸேஷன்ஸ்.. அனைத்து கதாப்பாத்திரங்களிடம் இருந்தும் அமேஸிங் பர்ஃபாமன்ஸ்.. ஆர்யாவின் அர்ப்பணிப்பு மனதை கவர்கிறது.. அவரது கேரியரில் பெஸ்ட் படம்.. இயக்குநர் ரஞ்சித்தின் வேலை சிறப்பானது என பதிவிட்டுள்ளார்.
லவ் யூ..
தனது அம்மாவின் இந்த பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்துள்ள நடிகர் ஆர்யா, தேங்க் யூ சோ மச் மம்மி.. லவ் யூ என பதிவிட்டுள்ளார். ஆர்யா தன் வீட்டில் அமர்ந்து தனது படத்தை பார்க்கும் போட்டோ வைரலாகி வருகிறது.