ஆர்யா-சாயிஷா கல்யாணத்தால சிம்புவுக்கு ‘இப்டி’ ஒரு பிரச்சினையா?

சிம்பு பற்றிய மீம்ஸ் ஒன்று வைரலாகியுள்ளது.

சென்னை: ஆர்யா திருமணப் புகைப்படங்கள் ஒருபுறம் இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்க, சிம்புவின் புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

நடிகர் ஆர்யா - சாயிஷா திருமணம் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. சங்கீத், மெஹந்தி, வரவேற்பு என இரண்டு நாட்களுக்கு முன்னரே திருமணக் கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கிவிட்டன.

இந்த நிகழ்வுகளில் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இதனால் ஆர்யா - சாயிஷா திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, சிம்பு பற்றிய மீம்ஸ் ஒன்றும் வைரலாகி இருக்கிறது.

ஆர்யா திருமணம்:

ஆர்யா திருமணம்:

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக ஆர்யா, விஷால், சிம்பு போன்றோரின் திருமணங்களை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருந்தனர். தற்போது அவர்களில் ஆர்யாவுக்கு திருமணம் முடிந்து விட்டது. ஏற்கனவே, அனிஷாவைக் காதலிப்பதாக விஷால் தெரிவித்திருப்பதால், விரைவில் அவரது திருமணமும் நடைபெறும் எனத் தெரிகிறது.

சிம்பு திருமணம்:

சிம்பு திருமணம்:

இதனால் சிம்புவின் திருமணம் எப்போது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நயன், ஹன்சிகா என இருவருடனான காதலும் சிம்புவுக்கு தோல்வியிலேயே முடிந்தது. இதனால், அவருக்கு பெண் தேடும் படலத்தில் குடும்பத்தார் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.

குறளரசனுக்கும் திருமணம்:

குறளரசனுக்கும் திருமணம்:

இந்நிலையில், அடுத்த மாதம் அவரது தம்பி குறளரசனுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. ஆனால், சிம்பு திருமணம் பற்றி மட்டும் எதுவும் அப்டேட்டே இல்லை. இதனை கலாய்க்கும் விதமாக இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிரியங்கா:

பிரியங்கா:

அதில், சிம்புவைப் பார்த்து அவரது அப்பா டி.ஆர்., ‘உனக்கு எப்போடா கல்யாணம்?' எனக் கேட்பது போல் உள்ளது. இதனை விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளினி பிரியங்கா பெயரில் ரசிகர்கள் உருவாக்கியுள்ள டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X