சிம்பு படத்தில் இணைந்த ஆர்யா மனைவி.. திருமணத்துக்கு பிறகு இப்படியொரு ரோலில் நடிக்கப் போறாரா?
சென்னை: சிம்புவின் படத்தில் நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வனமகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் படத்தில் நடித்த நிலையிலேயே இருவரும் காதலிக்கத் தொடங்கினர். காப்பான் படம் முடிந்ததும் திருமணமும் செய்து கொண்டனர்.
நடிகை சாயிஷா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது சிம்பு படத்தில் நடித்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

யம்மா அழகம்மா
2015ம் ஆண்டு தெலுங்கில் வெளியான அகில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. அதன் பின்னர் இந்தியில் வெளியான ஷிவாய் படத்தில் நடித்தார். 2017ம் ஆண்டு ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சாயிஷா, கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடி மற்றும் கன்னட படமான யுவரத்னா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆர்யாவுடன் காதல்
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தை இயக்கிய இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யாவும் சாயிஷாவும் கஜினிகாந்த் எனும் காமெடி காதல் படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் தீ பற்றிக் கொள்ள அந்த படம் முடிந்ததும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

திருமணமும் குழந்தையும்
காப்பான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்திருப்பார். அதே படத்தில் ஆர்யாவும் நடித்திருப்பார். அந்த படம் முடிந்ததும் 2019ம் ஆண்டு ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார் சாயிஷா. கடந்த ஆண்டு ஜூலை 23ம் தேதி ஆர்யா - சாயிஷா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்த நிலையில், அதற்கு அரியானா என பெயர் வைத்து வளர்த்து வருகின்றனர்.

திருமணத்துக்கு பிறகும் சினிமா
திருமணத்துக்கு பிறகு மீண்டும் ஆர்யாவுடன் இணைந்து டெடி படத்தில் நடித்திருந்தார் சாயிஷா. கன்னடத்தில் ஏற்கனவே கமிட்டான மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் யுவரத்னா படத்திலும் நடித்திருந்தார். அந்த படம் 2021ல் வெளியானது. அதன் பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த சாயிஷா சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களை அடுக்கி வரும் போதே மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கப் போகிறாரா என கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது சிம்பு படத்தில் சாயிஷா நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிம்பு படத்தில்
இயக்குநர் ஒபெலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் மற்றும் கவுதம் மேனன் நடித்துள்ள பத்து தல படத்தில் தான் சாயிஷா நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மணல் மாஃபியா ஏஜிஆர் ஆக சிம்பு நடித்து வரும் இந்த படத்தில் அண்டர் கவர் போலீஸ் அதிகாரியாக கவுதம் கார்த்திக் நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர் கவுதம் கார்த்திக்கின் ஹீரோயின். இந்நிலையில், கன்னடத்தில் ஹீரோ சிவராஜ்குமாரின் தங்கையாக சாயா சிங் நடித்த கதாபாத்திரத்தில் தான் தமிழில் சிம்புவின் தங்கையாக சாயிஷா நடித்துள்ளாரா என கேள்விகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











