ஷாருக்கான் மகன் நிரபராதி.. போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அறிக்கை .. தீர்வு விவரம் !
மும்பை : போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் நிரபராதி என போதைப் பொருள் தடுப்பு பிரிவு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மும்பையில் நடுக்கடலில் கடந்த அக்டோபர் மாதம் 2ந் தேதி நள்ளிரவில் ஒரு கப்பலில் சிறப்பு விருந்துக்கு சிலர் ஏற்பாடு செய்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த விருந்தில் கோடீஸ்வரர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள், திரையுலக பிரபலங்கள், மாடலிங் உலகை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் இடம் பெற்றிருந்தனர்.

போதை பொருள்
ரகசியமாக கிடைத்த தகவலை அடுத்து, போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீஸார் பயணிகள் போல அதே கப்பலில் ஏறினர். மும்பையில் இருந்து கிளம்பி கப்பல் கடலுக்குள் பயணித்த போது அங்கு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சிலர் போதை பொருள் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து 8 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த கோகைன் உள்ளிட்ட விலைமதிக்கத்தக்க போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

ஆர்யன் கான் கைது
இந்த வழக்கில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் அர்பாஸ் மெர்ச்சண்ட், முன்முன் தமேச்சா, கோமித், மோஹக் உள்ளிட்டோர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆர்யன் கானுக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், நான்கு வாரங்களுக்குப் பிறகு ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆர்யன் கான் நிரபராதி ?
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் 6 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை போதைப்பொருள் தடுப்பு போலீசார் தாக்கல் செய்தனர். அதில், போதைப்பொருள் வைத்திருந்ததற்காக என்டிபிஎஸ் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆர்யன் கான் உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய ஆதாரமில்லை
ஆர்யா கான் ஜாமீன் கேட்ட போது அவர் வெளியில் சென்றால் காட்சியை கலைத்துவிடுவார், அவர் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர் என, என்.சி.பி ஆர்யா கானின் வாட்ஸ் அப் தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த நிலையில், ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரமில்லை என என்.சி.பி அறிக்கை வெளியிட்டுள்ளதால் பெரும்பரப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











